ஃபிரிட்ஜை ஏசியாக பயன்படுத்துவது எப்படி ? மொத்த இந்தியாவையும் அதிர வைத்த தமிழக இளைஞர்.. பாருங்க
சென்னை: உயிரே, உயிரே வந்து என்னோடு கலந்துவிடு.. அப்படியே தப்பிச்சு எப்படியாவது ஓடிவிடு என்பது போல் தான் வெயில் வாட்டி வதைக்கிறது.. இந்தியாவின் எப்படி வெயில் இருக்கும் என்பதை காட்டும் அடர் சிவப்பு நிற புகைப்படங்களை பார்த்து பாதி பேர் பீதியில் உள்ளனர். இந்நிலையில் ஃபிரிட்ஜை ஏசியாக பயன்படுத்துவது எப்படி என்ற வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ளது.
தமிழ்நாட்டில் மே மாதம் நேற்று தான் பிறந்தது.. அதுவும் எப்படி பிறந்தது என்றால், இதுவரை இல்லாத அளவிற்கு வெப்பநிலையுடன் பிறந்துள்ளது. பல நகரங்களில் வெயிலின் தாக்கம் மிக கடுமையாக இருக்கிறது. மே மாதத்தின் முதல் நாளே ஏப்ரல் மாதத்தில் இல்லாத அளவிற்கு பல இடங்களில் வெயில் உச்சம் தொட்டுள்ளது. 20 நகரங்களுக்கு மேல் 100 டிகிரிக்கு மேல் வெயில் பதிவாகி உள்ளது.

இதுவரை எப்போதுமேஇல்லாத அளவாக கரூர் பரமத்தியில் 111 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகி உள்ளது. ஈரோடு, வேலூர் பகுதியில் சர்வ சாதாரணமாக 110 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது. கடலோர நகரமான சென்னையோ சும்மாவே வெயிலுக்கு தாங்காது.. 100 டிகிரி அடித்தாலே 110 அளவிற்கு வெயில் தாக்கம் இருக்கும்.. வெளியில் வந்தாலே வெந்துவிடும் அளவிற்கு வெக்கையும் அடிக்கும்.
மரங்களே அதிகம் இல்லாத சென்னை என்ற காங்ரீட் காட்டில் ஏசி இல்லாமல் அல்லது மின்விசிறி ஓடாமல் டிசம்பரை தவிர வேறு எந்த மாதமும் வாழ முடியாது.. அப்படியான சூழலில், தற்போது வெயிலின் தாக்கம் சென்னையிலும் கடுமையாக உள்ளது. தமிழ்நாடு மட்டுமல்ல ஆந்திரா, கர்நாடகா, டெல்லி, பஞ்சாப், ராஜஸ்தான் என இந்தியா முழுவதுமே வெயிலின் தாக்கம் இயல்பைவிட அதிகமாக உள்ளது.
வெயிலில் இருந்து தப்பிக்க பணக்காரர்கள் வீடுகளில் ஒரு ஏசி அல்ல 3 ஏசி கூட வாங்கி மாட்டி வைத்திருக்கிறார்கள்.. ஏழைகளுக்கு மின்விசிறி தான் ஒரே தீர்வு .. ஆனால் அடிக்கும் வெயிலுக்கு வெப்பக்காற்று தான் மின்விசிறியில் வரும். அதுவும் மொட்டை மாடிக்கு கீழ் உள்ள வீடுகள், தகர வீடுகளில் வெயில் கோர முகத்தை காட்டிவிடும். இந்த சூழலில் பலரும் வெயிலில் இருந்து தப்பிக்க நூதன முயற்சியில் இறங்கி உள்ளனர். ஏர்கூலரை வைத்து சமாளிக்க முயற்சிக்கிறார்கள்.
How to use your refrigerator as air conditio pic.twitter.com/QAW8QWLWmx
— Eminent Woke (@WokePandemic) April 30, 2024
சிலர் மொட்டை மாடியில் சுண்ணாம்பு மற்றும் பெவிக்கால் கலந்து அடித்து வெப்பத்தை தடுக்க முயற்சிக்கிறார்கள். அந்த வகையில் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு இளைஞர் ஃபிரிட்ஜை ஏசியாக பயன்படுத்துவது எப்படி ? என்று முயற்சி செய்து பார்த்துள்ளார். இது தொடர்பான வீடியோவை எமினென்ட் வோக் என்பவர் தனது எக்ஸ் தளம் (ட்விட்டர்) பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அந்த வீடியோவில் தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் வீட்டில் உள்ள ஃபிரிட்ஜை திறந்து வைத்திருக்கிறார். அதற்கு முன்பு பெரிய ஏர் கூலரையும் வைத்துள்ள நபர், அவற்றின் முன்புறம் கட்டிலில் நிம்மதியாக படுத்து உறங்குவது போன்று காட்சி இருக்கிறது, இந்த வீடியோ 20 லட்சத்திற்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டுள்ளது.
இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், இது முட்டாள்தனமான ஐடியா என்றும், இயற்பியல் விதிப்படி ஃபிரிட்ஜை திறந்து வைத்தால், வெப்பநிலை உடனடியாக அந்த அறையில் அதிகரிக்கும் என்றும் கூறியுள்ளனர். a2+b2+2ab இல் 2ab கூடுதல் என்று நினைக்கும் ஒருவர் தான் இப்படி அறிவில்லாமல் செய்வார் என்றும், அதற்கு இந்த வீடியோ உதாரணம் என்றும் கூறியுள்ளனர். இன்னொரு நெட்டிசனோ, 15000 ரூபாய்க்கு பிரிட்ஜ் வாங்கி, 7000 ரூபாய்க்கு ஏர்கூலர் வாங்கி இப்படி செய்வதற்கு , வெறும் 22000க்கு ஏசி வாங்கினால் இப்படி செய்ய தேவையில்லையோ என்று கூறியுள்ளார்.
அதேபோல் ஏர்கூலரை இப்படி வைத்தால் உடல் நலம் பாதிக்கப்படும் என்றும், தொடர்ந்து திறந்து வைப்பதால் ஃபிரிட்ஜ் நிலையும் விரைவில் மோசமாகி பழுதடைந்துவிடும் என்றும் நெட்டிசன்கள் கூறியுள்ளனர். பல்வேறு கடுமையான விமர்சனங்கள் வந்த போதும், இருப்பதை வைத்து இப்படி எல்லாமே யோசிப்பீர்கள் என்று சிலர் கேட்காமலும் இல்லை..
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications