ஒரு நாள் மழைக்கே சந்திரமுகியாக மாறிய ஹைதராபாத்.. சாலைகளில் நான்கு அடி வரை பாய்ந்த வெள்ளநீர்
ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் இன்று மிகப்பெரிய அளவில் கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் நகரின் பல்வேறு இடங்களில் வெள்ளநீர் பாய்ந்தோடியது. நகரின் முக்கிய பகுதிளில் ஒன்றாக டோலிசௌக்கி பகுதியில் 3 முதல் நான்கு அடி உயரத்திற்கு தண்ணீர் தேங்கி நின்றது. இதனால் வாகன ஓட்டிகள் வாகனங்களில் செல்ல முடியாமல் முடங்கி நின்றார்கள். கடைகளும் பாதிக்கப்பட்டன .
ஹைதராபாத்தில் இன்று (திங்கள்கிழமை) கனமழை பெய்ததால், பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து கடுமையான பாதிக்கப்பட்டது. சாலைகளில் பல இடங்களில் தண்ணீர் தேங்கியபடி இருந்ததால், வாரத்தின் முதல் நாளான இன்று அலுவலகம் முடிந்து வீட்டுக்குச் செல்ல முடியாமல் பயணிகள் பல மணிநேரம் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவித்தார்கள். சென்னை எப்படி மழையில் சிக்கி சின்னாபின்னமாகுமோ, அதுபோல் இன்று ஹைதராபாத் கனமழை மற்றும் வெள்ளநீர் உடனே வெளியேறி செல்ல வழியில்லாமல் பெரும் சிரமங்களை சந்தித்தது.

ஹைதராபாத்தில் இன்று மாலையில் பல சாலைகள் வெள்ளத்தில் மூழ்கியதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. டோலிசௌக்கி, ஷேக்பேட், ஜூப்லி ஹில்ஸ் செக்போஸ்ட், மசாப் டேங்க், மெஹ்திப்பட்டினம், நானல் நகர், மைத்ரிவனம், எஸ்ஆர் நகர் மற்றும் பேகம்பேட் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளநீரால் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் ஹைதராபாத் மற்றும் சைபராபாத் போக்குவரத்துக் போலீசார் ஏற்பட்ட கடும் போக்குவரத்து நெரிசலை சரிசெய்ய பெரும் சிரமங்களை சந்தித்தார்கள். அதே நேரத்தில் ஹைதராபாத் மாநகராட்சி ஊழியர்கள் (ஜிஹெச்எம்சி) தண்ணீர் தேங்கி நின்ற பகுதிகளில் அடைப்புகளை எடுத்துவிட்டு சரி செய்து பிரச்சனைகளை சரி செய்தனர். இரவு வரை கடும் நெரிசலுக்கு நடுவில் நீண்ட நேரத்திற்கு பிறகே மக்கள் வீடுகளை அடைந்தனர்.

ஹைதராபாத்தில் இன்று பெய்த கனமழையால் செகந்திராபாத் மற்றும் ஷேக்பேட்டையில் உள்ள தாழ்வான பகுதிகள் மற்றும் பிற பகுதிகள் மிக மோசமாக பாதிக்கப்பட்டன. ஷேக்பேட்டையில், சென்ட்ரல் மீடியனின் இருபுறமும் மழை நீர் தேங்கி நின்றதால், பாதசாரிகள் இடுப்பளவு நீரில் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருந்தது.
இதேபோல் சாலைகளில் சிக்கிய காரை கிரேன் மூலம் தூக்கும் பணியில் போக்குவரத்து போலீசார் ஈடுபட்டார்கள். இந்த திடீர் கனமழையால் பூக்கள், பழங்கள் விற்கும் பல வியாபாரிகள் பாதிக்கப்பட்டனர். பள்ளிகள் மற்றும் அரசு நிறுவனங்களுக்கு விடுமுறை நாளாக இருந்ததால் ஹைதராபாத் ஓரளவு தப்பித்தது. 'ரக்ஷா பந்தன்' விழாவை முன்னிட்டு இன்று விடுமுறை என்பதால், பலரும் உறவினர் வீடுகளுக்குச் சென்று கொண்டிருந்தநிலையில், மழையில் சிக்கி மக்கள் பரிதவித்து போனார்கள்.
-
பொதுமக்களே உஷார்! இன்று 22 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை.. மஞ்சள் அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
வெளுத்து வாங்கப் போகும் கனமழை! இரவோடு இரவாக 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! வானிலை மையம் எச்சரிக்கை -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
அமெரிக்காவில் ஹைதராபாத் இளைஞர் ஜாலி சுற்றுலா.. 3 பேரை காப்பாற்றியவருக்கு கனவிலும் நினைக்காத சம்பவம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications