அடுத்த ‘புயல்’? அரபிக் கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு.. வானிலை மையம் எச்சரிக்கை!
சென்னை: அடுத்த 24 மணி நேரத்தில் அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
வங்கக் கடலில் உருவான மிக்ஜாம் புயல் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களை புரட்டிப் போட்டுள்ளது. மிக்ஜாம் புயல் காரணமாக கொட்டிய கன மழையால் இந்த நான்கு மாவட்டங்களில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்கள் சொல்ல முடியாத அளவிற்கு துன்பத்திற்கு ஆளாகியுள்ளனர். 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து மீட்பு பணிகள் மற்றும் நிவாரண பணிகள் நடைபெற்று வருகின்றன.

மிக்ஜாம் புயல் சென்னையை விட்டு விலகி ஆந்திரா நோக்கிச் சென்று நெல்லூர் மசூலிப்பட்டினம் இடையே கரையைக் கடந்த நிலையிலும், அது சென்னையில் ஏற்படுத்திய பாதிப்பு கொஞ்ச நஞ்சமல்ல. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகள் பலவற்றில் இன்னும் மழைநீர் வடியாமல் உள்ளது. இந்நிலையில், அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அடுத்த 24 மணி நேரத்தில் அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாகவும், தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஓட்டிய மாலத்தீவு பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது என்றும், அதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
மேலும், இதன் காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும், தமிழ்நாட்டைப் பொறுத்தவரை நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, மதுரை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை தமிழகத்தில் கோவை, நீலகிரி, தென்காசி, திருநெல்வேலி, திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், சிவகங்கை, மதுரை, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை மற்றும் நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களிலும் மற்றும் புதுச்சேரிய் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான், அரபிக்கடலில் உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக தமிழகத்தில் தென்மாவட்டங்களில் நல்ல மழை பொழிவு இருக்கும், அரபிக் கடல் பகுதியில் காற்றத்தழுத்த தாழ்வுநிலை இந்திய கடற்பகுதியை நோக்கி வரலாம். ஆனால், அதனால் சென்னைக்கு பாதிப்பு ஒன்றுமில்லை எனத் தெரிவித்துள்ளார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications