அரபிக்கடலின் மேஜிக்.. பருவமழை முடிந்தும் கருக்கும் வானம்! தென் மாவட்டங்களுக்கு மழை.. வானிலை அலர்ட்
திருநெல்வேலி: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை முடிவுக்கு வந்திருக்கும் நிலையில், மாநிலம் முழுவதும் வறண்ட வானிலை நிலவுகிறது. இந்நிலையில் தென் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இன்று அதிகாலை முதல் மழை பெய்து வருகிறது. இது குறித்து வானிலை மையம் கூறுகையில், அடுத்த 2 மணி நேரத்தில் 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பிருக்கிறது என தெரிவித்திருக்கிறது.
தமிழ்நாட்டிற்கு வழக்கமாக தென்மேற்கு பருவமழையும், வடகிழக்கு பருவமழையும் போதுமான அளவு மழையை கொடுக்கும். ஜூன் முதல் வாரத்தில் துவங்கி செப்டம்பர் மாதம் வரை நீடிக்கும் தென்மேற்கு பருவமழையானது, தென்னிந்தியா முழுவதும் 80 சதவிகித மழையை கொடுக்கும். ஆனால் இந்த முறை இது பெரும் ஏமாற்றத்தையே கொடுத்தது. போதிய மழை இல்லாததால் கேரளா சற்று தடுமாறியது. அணைகளிலிருந்து வெளியேற்றப்படும் நீரிலிருந்து தயாரிக்கப்படும் மின்சாரத்தின் அளவும் குறைந்ததால், மின் பற்றாக்குறை ஏற்பட்டது.

அதேபோல கர்நாடக மாநிலத்தில் நீர் பிடிப்பு பகுதிகளில் போதிய மழை பெய்யாததால் கிருஷ்ண ராஜ சாகர் உள்ளிட்ட அணைகளுக்கு போதுமான அளவு நீர் வரவில்லை. எனவே அங்கிருந்து மேட்டூருக்கு திறந்துவிடப்படும் நீரின் அளவு வெகுவாக குறைந்தது. இது தமிழ்நாட்டின் டெல்டா மாவட்டங்களை பாதித்தது. ஆங்காங்கே போராட்டங்களும் நடைபெற்றன.
கேரளா, கர்நாடகாவை ஒப்பிடும்போது தமிழ்நாட்டை பொறுத்த அளவில் அதிகமாகவும் இல்லாமல், குறைவாகவும் இல்லாமல் ஓரளவு போதுமான அளவு மழையை தென்மேற்கு பருவமழை கொடுத்தது.
இதனை தொடர்ந்து வந்த வடகிழக்கு பருவமழை, தொடக்கம் முதலேயே அதிரடியாக மழையை கொடுத்தது. தமிழ்நாட்டில் மேட்டூர் தவிர ஏறத்தாழ அனைத்து நீர் நிலைகளும் இந்த மழை காரணமாக நிரம்பிவிட்டன. தென் தமிழகத்தில் ஒரே நாளில் அதிக அளவு மழை பெய்ததால், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பாதிப்பு ஏற்பட்டது. இந்நிலையில் பொங்கல் பண்டிகையுடன் வடகிழக்கு பருவமழை விலகிக்கொண்டிருக்கிறது.
எனவே தமிழ்நாடு முழுவதும் வறண்ட வானிலை நிலவி வருகிறது. பெரும்பாலான இடங்களில் கடும் குளிரும், பனி மூட்டம் நிலவுகிறது. உதகையில் உறைபனிக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில், அடுத்த 2 மணி நேரத்தில் 5 மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருக்கிறது. அதாவது, காலை 10 மணிக்குள் திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் மதுரை மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இன்று அதிகாலை முதல் திருநெல்வேலி மாவட்டத்தில் அம்பாசமுத்திரம், மணிமுத்தாறு, கல்லிடைக்குறிச்சி, மாஞ்சோலை உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. இந்த மழைக்கு தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலலும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி தான் காரணம் என்று வானிலை ஆய்வு மையம் விளக்கியுள்ளது.
-
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
After Super Soodu... சென்னை உள்பட 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! கண்டிஷனுடன் சொன்ன வெதர்மேன் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை












Click it and Unblock the Notifications