ஈ சாலா மழை நம்து.. சவுத்தை சூளும் ஆரஞ்ச் பூதம்! கர்நாடகாவே குளிர போகுது.. இந்த தேதி ரொம்ப முக்கியம்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: கர்நாடகாவில் இன்று முதல் 5 நாட்களுக்கு கனமழைக்கும், மே 20, 21 ஆகிய தேதிகளில் மிக கனமழைக்கும் வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ள நிலையில், காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளான குடகு, மைசூரு, மாண்டியா உட்பட 8 மாவட்டங்களில் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு தமிழகம் மட்டுமல்லாது இந்தியா முழுவதுமே கோடை வெயிலின் தாக்கம் மிக அதிகமாகவே இருந்தது வெப்ப அலை காரணமாக அதிக வெப்பநிலை பதிவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்தது.

IMD predict that karnataka will receive heavy rain in coming 20th and 21th

அதிகாலை நேரங்களில் வீட்டில் தங்கியிருக்கும் மக்கள் கூட அதீத வெப்பத்தை உணர்ந்தனர். காலை 7 மணிக்கு வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியது இதனால் பெண்கள் முதியவர்கள் பச்சிளம் குழந்தைகள் அதிக அளவில் பாதிப்புக்கு உள்ளாகினர்.

கோடை மழை: தமிழகத்தில் வெப்ப அலை காரணமாக பல்வேறு பகுதிகளில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வீசியது. வெப்ப நிலை குறைவாக இருந்தாலும் வெப்ப அலை காரணமாக தமிழகத்தின் சமவெளி பகுதிகளில் கூடுதல் வெப்பநிலை ஏற்பட்டதாக வானிலை ஆய்வாளர்கள் கூறியிருந்தனர். இந்த நிலையில் தான் மக்களுக்கு வரப் பிரசாதமாக அமைந்தது கோடை மழை. மே முதல் வாரத்தில் பேனை தேடிய மக்கள், 2வது வாரத்தில் ஹீட்டரை தேடும் நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.

பலத்த காற்றுடன் மழை: தென்னிந்திய பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 20 ஆம் தேதி வரை மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்திருந்தது. சொன்னது போலவே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகள் வட மாவட்டங்கள் கொங்கு பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. காலையில் லேசாக வெயில் இருந்தாலும் மாலைக்கு மேல் பலத்த காற்றுடன் பொழிவு இருக்கிறது.

கர்நாடகாவில் மழை: இதனால் குளிர்ச்சியான காலநிலை நிலவி வருவதால் அக்னி வெயிலின் தாக்கம் வெகுவாக குறைந்து இருப்பதாக மக்கள் கூறுகின்றனர். இந்த நிலையில் தான் கர்நாடகாவில் இன்று முதல் 5 நாட்களுக்கு கனமழைக்கும், மே 20, 21ம் தேதிகளில் மிக கனமழைக்கும் வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. குறிப்பாக காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளான குடகு, மைசூரு, மாண்டியா உட்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்திய வானிலை மையம்: கேரளாவிலும் வரும் 20ம் தேதி அதி கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் அங்கும் அன்றைய தினம் சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் நாளையில் இருந்து வரும் 21 ஆம் தேதி வரை கேரளா மற்றும் தெற்கு உள் கர்நாடகாவில் மிக கன மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் மே 9ம் தேதியில் இருந்து 15ம் தேதி வரை தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட தென் மாநிலங்களில் பெய்ய வேண்டிய மழையின் அளவு 16.4 சென்டிமீட்டர் என்றும், ஆனால், 25.9 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளதாகவும் இந்திய வானிலை மையம் கூறியுள்ளது.

ஐபிஎல் போட்டி: வரும் 18ஆம் தேதி ஐபிஎல் போட்டியில் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் சிஎஸ்கே - ஆர்சிபி அணிகள் மீது மோதும் நிலையில், அங்கு 21ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதன் காரணமாக போட்டி தடைபட்டால் அது ஆர்சிபி அணிக்கு பெரும் இடியாக அமையும். இதனால் அந்த அணியின் ப்ளோ-ஆப் சுற்று வாய்ப்பும் பரிபோகும். இந்நிலையில் ஈ சாலா கப் இருக்கோ இல்லையோ ஈ சாலா மழை உண்டு என்கின்றனர் வானிலை ஆய்வாளர்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+