123 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 2024 இல் வெப்பம்! இந்திய வானிலை மையம் அதிர்ச்சி தகவல்
டெல்லி: இந்தியாவில் கடந்த 123 ஆண்டுகளில் இல்லாத வெப்பம், 2024 ஆம் ஆண்டு பதிவாகியுள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
2024 ஆம் ஆண்டு முடிந்து 2025 ஆம் ஆண்டு பிறந்துள்ளது. இந்த நிலையில் கடந்த ஆண்டு வெயில் எப்படி இருந்தது என்பது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் ஜெனரல் மிருத்யுஞ்சய் மொஹபத்ரா விவரித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: இந்தியாவில் 1901 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரையிலான பதிவுகளின் அடிப்படையில் தற்போது விடைப்பெற்ற 2024 ஆம் ஆண்டுதான் அதிகப்படியான வெப்பம் பதிவாகியுள்ளது.
கடந்தாண்டு வெப்பநிலை, இயல்பை விட 0.54 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருந்தது. சராசரி குறைந்தபட்ச வெப்பநிலை என்பது 0.90 டிகிரியாக உள்ளது. ஐரோப்பிய வானிலை மையத்தின் தகவலின்படி கடந்த ஆண்டு வெப்பநிலை அதிகமாக பதிவாகியுள்ளது. 2024 ஆம் ஆண்டு உலகிலேயே 41 நாட்கள் மிக ஆபத்தான வெப்பம் இருந்தது. உலகில் சராசரியாக வெப்பநிலை 1.5 டிகிரி செல்சியஸ் என்ற மைல்கல்லை எட்டிய முதல் ஆண்டு இதுவாகும்.
கடந்த 2016 ஆம் ஆண்டு பதிவாகியிருந்த வெப்பநிலையை 2024 ஆம் ஆண்டு பதிவானது முறியடித்துள்ளது. உலகம் முழுவதுமே அதிக அளவு வெப்பம் பதிவான நாட்கள் அதிகமாகவே உள்ளன என தெரிவித்திருந்தார். இது காலநிலை மாற்றத்தின் காரணமாக நிகழ்ந்திருக்கலாம் என தெரிகிறது.
உலகம் முழுவதுமே 2024 ஆம் ஆண்டு 219 மோசமான பருவநிலை நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன. இதில் 26 நிகழ்வுகளில் 3,700 பேர் உயிரிழந்தது மட்டுமில்லாமல் லட்சக்கணக்கானோர் புலம் பெயர்ந்துள்ளனர். அதீத வெப்பம், பஞ்சம், புயல்கள், அதீத மழை ஆகியவற்றுக்கு காலநிலை மாற்றமே காரணம் என சொல்லப்படுகிறது. இந்த நிலை மேலும் மோசமடையும் என எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளது.
-
Low Pressure: காற்றழுத்த தாழ்வு பாதையால் நடக்கும் மேஜிக்! தென் கடலோர மாவட்டங்களில் பிச்சு உதறப் போகுது மழை! -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம்












Click it and Unblock the Notifications