இந்திய வானிலை மைய கணிப்பு தவறியுள்ளது.. பெருமழை பெய்யும் என கணிக்கவில்லை.. சிவ்தாஸ் மீனா
சென்னை: இந்திய வானிலை ஆய்வு மையம் பெரு மழை பெய்யும் என கணித்து கூறவில்லை என்றும், வானிலை ஆய்வு மையம் கணிப்பு சரியாக இருந்தால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் சரியாக இருக்கும் என்றும் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா கூறினார்.
நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, குமரி ஆகிய 4 மாவட்டங்களில் பெருமழை பெய்தது. இதில் நெல்லை, தூத்துக்குடியில் பல இடங்களில் மிகப்பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டது. வெள்ளம் பாதித்த பகுதிகளில் தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து வருகிறது. இந்த நிலையில், தென் மாவட்ட மழை வெள்ள பாதிப்பு குறித்து தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

காயல்பட்டினத்தில் 30 மணி நேரத்தில் 116 செமீட்டர் மழை பெய்துள்ளது. 9 ஹெலிகாப்டர்கள் மீட்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. ஹெலிகாப்டர்கள் மூலமாக உணவும் வினியோகிக்கப்பட்டு வருகிறது. இதேபோல் தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று 30 ஆயிரம் லிட்டர் பால் சப்ளை செய்யப்பட்டுள்ளது. இன்னும் ஓரிரு நாளில் பால் சப்ளை நார்மல் ஆகிவிடும். 323 படகுகள் மூலமாகவும் மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
நெல்லை, தூத்துக்குடியில் நிறைய பகுதிகளில் மின் வினியோகம் இல்லை. மின்மாற்றிகள், மின்கம்பங்கள் பழுதாகியிருப்பதால் உடனடியாக மின்சாரம் வழங்க முடியவில்லை. உடனடியாக மின்சாரம் வழங்கினால் மழையினால் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. இந்திய வானிலை ஆய்வு மையம் பெரு மழை பெய்யும் என கணித்து கூறவில்லை. வானிலை ஆய்வு மையம் கணிப்பு சரியாக இருந்தால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் சரியாக இருக்கும்.
பெருமழையால் இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர். வீடு இடிந்து 3 பேர், மின்சாரம் தாக்கி 2 பேர் என மொத்தம் 10 பேர் உயிரிழந்துள்ளனர். இதேபோல் 27 மாடுகள், 297 ஆடுகள் ஆயிரக்கணக்கான கோழிகள் உயிரிழந்துள்ளன. ஸ்ரீவைகுண்டத்தை சுற்றியுள்ள சாலைகள் அனைத்தும் சேதமடைந்துள்ளன. விமானப்படை, கடற்படை, கப்பல்படை மூலம் மீட்பு பணிகள் நடந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications