12 மாவட்டங்கள் ‛டார்க்கெட்’.. இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு.. உங்க ஊர் இருக்கா? வானிலை ‛அலர்ட்’
சென்னை: ‛மிதிலி' புயல் நேற்று வங்கதேசம் அருகே கரையை கடந்த நிலையில் இன்று தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவழை காலம் தொடங்கி உள்ளது. இதனால் பல மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது.

இதற்கிடையே தான் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதகிளில் நிலிவய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு-வடகிழக்கு திசையில் நகர்ந்து நேற்று காலை 5.30 மணிக்கு புயலாக மாறியது.
இந்த புயலுக்கு ‛மிதிலி' என பெயரிடப்பட்டது. இது வடமேற்கு வங்கக்கடல் பகுதியில் வலுப்பெற்றது. இந்த புயல் நேற்று வங்கதேசம் அருகே கரையை கடந்தது. அதிர்ஷ்டவசமாக இந்த புயலால் தமிழகத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இந்த புயலால் வங்கதேசத்திலும் கூட பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை என்பது ஆறுதலான விஷயமாகும்.
இருப்பினும் தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் இலங்கை பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணம் இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று தெரிவித்து இருந்தார்.
மேலும் சென்னையை பொறுத்தமட்டில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலைய30-31டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் தான் தற்போது புதிய அறிவிப்பு ஒன்றை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதாவது தமிழ்நாட்டில் இன்று 12 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது. அதன்படி கடலூர், மயிலாடுதுறை, நாகை, அரியலூர், திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, சிவகங்கை, சென்னை திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
****
-
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
பொதுமக்களே உஷார்! இன்று 22 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை.. மஞ்சள் அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
After Super Soodu... சென்னை உள்பட 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! கண்டிஷனுடன் சொன்ன வெதர்மேன்












Click it and Unblock the Notifications