வானிலை மையம் சொன்ன மாதிரியே நடந்துடுச்சு! தென் + டெல்டா.. 4 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்தில் மழை
சென்னை: தமிழகத்தில் வெயில் பட்டையை கிளப்பி வரும் நிலையில், அடுத்த இரண்டு மணி நேரத்தில் 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது.
வழக்கமாக தமிழகத்தில் மார்ச் மாதம்தான் கோடை தொடங்கும். ஆனால் இந்த முறை பிப்ரவரி இறுதியிலேயே கோடை தொடங்கிவிட்டது. இதனால் பல்வேறு பகுதிகளில் வெயில் 100 டிகிரியை தாண்டி பதிவாகியுள்ளது. கடந்த சில நாட்களாக கடலோரப் பகுதிகளில் 91- 98 டிகிரி பாரன்ஹீட் வரையும், மலைப்பகுதிகளில் 71-86 டிகிரி பாரன்ஹீட் வரையும் வெப்பம் பதிவாகியிருந்தது. அதிகபட்சமாக ஈரோட்டில் 106.16 டிகிரியும், கரூர் பரமத்தியில் 104 டிகிரி வரையும் வெப்பம் பதிவாகியிருந்த நிலையில் நேற்று, 107 டிகிரியாக வெயில் பதிவாகியுள்ளது.

அதாவது, ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் நேற்று 15 இடங்களில் வெயில் 100 டிகிரி பாரான்ஹீட்டை கடந்து பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக ஈரோட்டில் 107.6 டிகிரியும், சேலம் மற்றும் திருப்பத்தூரில் 106.8 டிகிரியும் வெயில் பதிவாகியுள்ளது. வேலூரில் 106.3 டிகிரியும், நாமக்கல்லில் 105.8, திருச்சி, தருமபுரியில் 105.2, திருத்தணியில் 104.7, தஞ்சாவூர், கரூர் பரமத்தியில் 104, மதுரை விமான நிலையம் 103.6, கோவை, 103.2, சென்னை மீனம்பாக்கம் 102.2, மதுரை நகரில் 101.4, பாளையங்கோட்டையில் 100 டிகிரியும் வெயில் பதிவாகியுள்ளது.
அதே நேரம் இன்று தென் தமிழக மாவட்டங்கள், வட தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்தில் 4 மாவட்டங்களில் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதாவது, தஞ்சாவூர், அரியலூர், திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இரவு 7 மணியளவில் லேசான மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
மற்றபடி, ஏப்.10 மற்றும் ஏப்.11ம் தேதிகளில் தென் தமிழக மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வட தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த இரு தினங்களுக்கு அதிகபட்ச வெப்ப நிலையில் மாற்றம் ஏதுமில்லை. அதற்கு அடுத்து வரும் மூன்று தினங்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை 2°3° செல்சியஸ் வரை படிப்படியாக குறையக்கூடும்.
இன்று முதல் ஏப்.11ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை வட தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் அநேக இடங்களில் 3°-5° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். இதர தமிழகத்தில் ஒருசில இடங்களில் 2-4° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை வட தமிழக உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் 104 - 105 டிகிரி பாரான்ஹீட் வெயில் வரை இருக்கும். உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் அநேக இடங்களில் 100-104 டிகிரி பாரான்ஹீட் வரையும் மற்றும் கடலோரப்பகுதிகளில் 93-98 டிகிரி பாரான்ஹீட் வரை வெயில் இருக்கக்கூடும். நாளை தொடங்கி ஏப்.11 வரை அதிகபட்ச வெப்பநிலை பொதுவாக தமிழகத்தில் 2° - 3" செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.
ஈரபதத்தை பொறுத்த அளவில், அடுத்த ஐந்து தினங்களில் காற்றின் ஈரப்பதம் தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் பிற்பகலில் 30-50 % ஆகவும், மற்ற நேரங்களில் 40-70 % ஆகவும் மற்றும் கடலோரப்பகுதிகளில் 50-80 % ஆகவும் இருக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம்" என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
அடுத்த 1 மணி நேரம் உஷார்! கோவை டூ கன்னியாகுமரி.. 12 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை! -
தலைமை செயலகத்தில் நெகிழ்ச்சி! சிறுவனை வாரி அணைத்து உணவூட்டிய அமைச்சர் வன்னியரசு.. உருகிய மக்கள் -
இது லிஸ்ட்லயே நம்ம இல்லையே! மொத்தமாய் மாற்றும் விஜய்.. தனியார் கைக்கு போகும் டாஸ்மாக்! எப்போது? -
அரசு பள்ளியில் தவெக எம்எல்ஏ மகளுக்கு அட்மிஷன்! இப்படித்தான் இருக்கனும்.. குவியும் பாராட்டு! -
இப்போ தெரிஞ்சு போயிரும்.. இன்னொரு எலக்சனுக்கு தயாராகும் தமிழகம்! சுறுசுறுப்பாய் தொடங்கிய ஏற்பாடுகள்! -
மக்கள் தலையில் விழுந்த இடி.. அதிரடியாக உயர்ந்த லாரி வாடகை! எந்தெந்த ஊருக்கு எவ்வளவு தெரியுமா? ஷாக்! -
கண்களை இருட்டாக்கும் சூரிய கிரகணம்.. 27 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் அதிசயம்! இந்தியாவில் தெரியுமா? -
சென்னை பக்கம் திரும்பிய மழை.. இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 9 மாவட்டங்களுக்கு அலர்ட் -
“வேதம் புதிது படத்தை இன்றைக்கு எடுத்தால் வர விடுவார்களா?” - பாரதிராஜா குறித்து நெகிழ்ந்த வன்னியரசு -
கிழிந்த நைட்டி.. குளிக்க வைத்தபோது கதறிய மகள்.. 93 வயது பாட்டி வரை தொடரும் காம மிருகங்களின் வக்கிரம் -
இயக்குநர் இமயம் சரிந்தது.. பாரதிராஜாவின் 50 ஆண்டுகால திரைப்பயணத்தில் குவித்த விருதுகளின் முழு விவரம் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர்












Click it and Unblock the Notifications