சென்னைக்கு கனமழை இருக்கா? தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன குட்நியூஸ்.. நாளைய நிலவரம் இதுதான்
சென்னை: சென்னையில் இன்று லேசான மழையும், நாளை காலை அல்லது மதியத்தில் இருந்து மழை படிப்படியாக குறையும். தற்போதைய காற்றழுத்த தாழ்வு நிலையால் பெரிய அளவில் மழை பெய்ய வாய்ப்பில்லை என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நேற்று நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது. இது அடுத்த 24 மணி நேரத்தில், வடமேற்கு திசையில் நகர்ந்து, வடதமிழக- தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளுக்கு அருகில் நிலவக்கூடும்.

அதற்கடுத்த 24 மணி நேரத்தில், வடக்கு திசையில், ஆந்திர கடலோரப்பகுதிகளை ஒட்டி நகரக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் இன்று கணித்து கூறியது.
மேலும் இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக இன்று வடகடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், இதர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை, செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியது.
அதன்படி இன்று மதியம் முதல் சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இரவிலும் கூட சென்னை, புறநகர் மற்றும் அதனையொட்டிய சில இடங்களில் மழை பெய்தது. இதனால் முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தான் சென்னையில் இன்று லேசான மழையும், நாளை முதல் மழை படிப்படியாக குறையும் என்று தனியார் வானிலை ஆர்வலரான தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளதாவது: ‛‛நகர் (சென்னை) முழுவதும் நல்ல மழை பெய்துள்ளது. அடுத்ததாக மிதமான மழையை தரும் மேகங்கள் நகரை நோக்கி நகர்கிறது. இதனால் லேசான மழை பெய்யும். அதேவேளையில் நாளை காலை/மதியத்தில் இருந்து குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழகத்தை விட்டு நகரும். இதனால் மழை என்பது குறையும். எனவே இந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் பெரிய அளவில் மழை பெய்ய வாய்ப்பில்லை''என்று கூறியுள்ளார்.
மேலும் சென்னையை பொறுத்தவரை இன்று காலை 8.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை அதிகபட்சமாக ராயபுரத்தில் 51.6 மிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. இதற்கு அடுத்தப்படியாக திருவொற்றியூரில் 49.8 மிமீ, தண்டையார்பேட்டையில் 48.3 மீமீ, கத்திவாக்கம் 44.1 மிமீ, டிவிகே நகர் 43.2 மிமீ, அண்ணா நகர் 41.7 மிமீ மழை பதிவாகி இருந்தது.
அதேபோல் கோடம்பாக்கத்தில் 39 மிமீ, ஐஸ் ஹவுசில் 36.3 மிமீ, அடையாரில் 34.5 மிமீ, பெருங்குடியில் 32.7 மிமீ, ஆலந்தூரில் 32.4 மிமீ, மீனம்பாக்கம் 6ஏ கேட் 28.8 மிமீ, அடையார் எக்கோ பார்க் 28.8 மிமீ, தேனாம்பேட்டையில் 28.5 மீமீ, மேடவாக்கத்தில் 28.2 மிமீ மழை என்பது பதிவாகி உள்ளது. இந்நிலையில் தான் நாளை முதல் சென்னையில் படிப்படியாக மழை குறைய வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீபன் ஜான் கணித்துள்ளார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications