அது ஏங்க! இந்த 4 மாவட்ட கடல்களுக்கு மட்டும் ஏதாவது நடந்துகிட்டே இருக்கு! எச்சரிக்கை!
சென்னை: தமிழகத்தில் கன்னியாகுமரி, நெல்லை, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களுக்கு இன்று இரவு 11.30 மணி வரை கள்ளக் கடல் எச்சரிக்கையை வானிலை மையம் விடுத்துள்ளது. இதனால் இந்த கடலோர பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதலே வெப்பம் தகித்து வந்தது. தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா உள்பட பல்வேறு பகுதிகளில் வரலாறு காணாத அளவுக்கு வெப்பம் பதிவானது. இதையடுத்து கத்திரி வெயில் தொடங்கியதும் மக்களுக்கு வெயில் பயம் மேலும் அதிகரித்தது.

இந்த நிலையில் வருண பகவான் கொடையாளி என்பதை நிரூபித்தது போல் ஆங்காங்கே ஆலங்கட்டி மழையும், கனமழையும் பெய்தது. தமிழகத்தில் பரவலாக மழை பெய்யவும் தொடங்கியது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, கீழடுக்கு சுழற்சி, வங்கக் கடலில் ஏற்பட்ட புயல் காரணமாக கனமழை பெய்தது.
இந்த நிலையில் உலகம் முழுவதுமே கடல் பரப்பின் வெப்பம் அதிகரித்து காணப்படுவதாக தனியார் வானிலை ஆய்வாளர்கள் எச்சரித்திருந்தனர். இதனால் இந்த ஆண்டு இறுதியில் அதீத மழை உள்ளிட்ட அசாதாரண வானிலை சூழல்கள் ஏற்படலாம் என சொல்லப்படுகிறது. இந்த நிலையில் தற்போது தமிழகத்தில் தென்மாவட்ட கடற்கரைகளுக்கு கள்ளக் கடல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பொதுவாக கடல் சீற்றம் என்பது புயலோ, காற்றழுத்த தாழ்வு நிலையோ, கடலுக்கு அடியில் ஏற்படும் நிலநடுக்கத்தின் போதும் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆனால் இது போன்ற எந்த நிகழ்வுகளும் இல்லாமல் பலத்த காற்றின் காரணமாக கடல் சீற்றம் என்பது கள்ளக்கடல் என அழைக்கப்படுகிறது.
எச்சரிக்கையின்படி கன்னியாகுமரியில் கடல் அலை 2.3 மீட்டர் முதல் 2.6 மீட்டர் வரையும் ராமநாதபுரத்தில் 2.7 முதல் 3 மீட்டர் வரையும் நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களை பொருத்தவரை 2.4 முதல் 2.7 மீட்டர் வரை கடல் அலை எழும்பக் கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று இரவு 11.30 மணி வரை இந்த எச்சரிக்கை தொடரும்.
கள்ள என்றால் திருட்டு என பொருள். எந்தவித வானிலை முன்னறிவிப்பும் இன்றி திருடன் போல் கடல் சீற்றம் வருவதால்தான் இதை கள்ளக்கடல் என கேரள மக்கள் அழைக்கிறார்கள். இந்த கள்ளக்கடல் நிகழ்வு இரு நாட்களுக்கு தென் தமிழக கடலோர பகுதி மற்றும் கேரளாவில் ஏற்படலாம் என்பதால் மீனவர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 10, 11 ஆம் தேதிகளிலும் கள்ளக் கடல் நிகழ்வு என்பது நடந்தது. அப்போது கன்னியாகுமரி மாவட்டத்தில் சுற்றுலா தலங்கள் எல்லாம் மூடப்பட்டன. எனினும் மக்கள் கடற்கரைகளுக்கு சென்று ஆபத்தை உணராமல் தண்ணீரில் குளித்து ஆட்டம் போட்டனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பும் தென் தமிழக பகுதியில் கள்ளக்கடல் நிகழ்வு ஏற்பட்டது. அப்போது கன்னியாகுமரி கடலில் குளித்த சிறுமி ராட்சத அலையில் சிக்கி பலியானார். அது போல் லெமூ கடற்கரையில் மருத்துவ மாணவர்கள் 4 பேர் கடல் அலையில் சிக்கி பலியாகினர். எனவே தான் இந்த முறை கள்ளக்கடல் நிகழ்வின் போது யாரும் வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
-
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே












Click it and Unblock the Notifications