கிருஷ்ணகிரி கிறுகிறுத்து போச்சு! குப்பையை போல் அடித்து செல்லப்பட்ட வாகனங்கள்! உதவி எண்கள் அறிவிப்பு!
கிருஷ்ணகிரி: பெஞ்சல் புயல் காரணமாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கனமழை எதிரொலியாக கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பேருந்து நிலையம் அருகே வாணியம்பாடி சாலையில் ஏரி நிரம்பி சாலையில் இருந்த வாகனங்கள் அடித்து செல்லப்பட்ட காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வெள்ள பாதிப்பு தொடர்பான உதவிகளுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கி வரும் கட்டணமில்லா தொலைபேசி எண் 1077 அழைத்து பொதுமக்கள் உதவிகள் பெறலாம் என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் கே.எம்.சரயு தெரிவித்துள்ளார்.
நேற்று முன் தினம் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய "ஃபெஞ்சல்" புயல், மேற்கு - தென்மேற்கு திசையில் நகர்ந்து, வடதமிழக - புதுவை கடற்கரையை, புதுச்சேரி அருகில் இரவு சுமார் 11 மணி அளவில் கடந்தது.

புயல் கரையைக் கடக்கும் போது காற்றின் வேகம் மணிக்கு 70 முதல் 80 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 90 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசியது. இதன் காரணமாக சென்னை, விழுப்புரம், கடலூர், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது.
தொடர்ந்து 11 மணிக்கு மேல் புயலின் முனைப் பகுதியும் அடுத்து மையப் பகுதியான கண் பகுதியும், இறுதியில் வால் பகுதியும் அடுத்தடுத்து கரையை கடந்தது. இதனால் புதுச்சேரி விழுப்புரம், கடலூர். திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி ஆகிய பகுதிகளில் சுமார் 60 முதல் 90 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசிய நிலையில் கனமழை கொட்டியது. குறிப்பாக கிருஷ்ணகிரி 300 ஆண்டுகளில் இல்லாத அளவு மழை பதிவை சந்தித்துள்ளது.
503 mm Uthangarai in Krishnagiri dt never ever they have got such rainfall. A slow moving cyclone dumped everything there. https://t.co/TjBsjoCfPp
— Tamil Nadu Weatherman (@praddy06) December 2, 2024
குறிப்பாக கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது குறிப்பாக பெஞ்சல் புயல் வலு குறைந்து ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமாக நிலவும் நிலையில் ஊத்தங்கரையில் மட்டும் 503 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. மேலும் வரலாற்றில் இல்லாத அளவாக தர்மபுரி மாவட்டம் அரூரில் 331 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. இது கடந்த 300 ஆண்டுகளில் இல்லாத அளவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
Uthangarai busstand krishnagiril flood waters gushing due to 50cm event pic.twitter.com/mcL1rLQImx
— MasRainman (@MasRainman) December 2, 2024
குறிப்பாக கிருஷ்ணகிரியில் கனமழை காரணமாக பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பகுதியில் வாணியம்பாடி சாலையில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக அப்பகுதியில் வாணியம்பாடி சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுற்றுலா வேன்கள், லாரிகள், கார்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.

தற்போது இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வெகுவாக பகிரப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பொதுமக்களின் வசதிக்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வெள்ள பாதிப்பு தொடர்பான உதவிகளுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கி வரும் கட்டணமில்லா தொலைபேசி எண் 1077-ஐ அழைத்து பொதுமக்கள் உதவிகள் பெறலாம் என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் கே.எம்.சரயு தெரிவித்துள்ளார். இந்த எண்களில் பொதுமக்கள் தொடர்பு கொண்டு வெள்ள பாதிப்பு, நிவாரணம், மருத்துவ உதவிகளை பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications