அடுத்த 5 நாட்களுக்கு கனமழை.. ரெட் + ஆரஞ்சு அலர்ட்! வானிலை மையம் பட்டியல் போட்ட மாவட்டங்கள் இதோ
சென்னை: தமிழகத்தில் கோடை மழை தீவிரமடைந்துள்ள நிலையில், அடுத்த 5 நாட்களுக்கு குறிப்பிட்ட சில மாவட்டங்களில் கனமழை முதல் அதி கனமழை வரை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
கடந்த வருடம் போல இந்த வருடமும் கோடை வெயில் சீக்கிரமே தொடங்கி விட்டது. மார்ச் தொடக்கத்தில் சூடேறிய வெயில், ஏப்ரல் மாதத்தில் உச்சத்தை எட்டியது. ஏப்ரல் மாதத்தில் பல்வேறு மாவட்டங்களில் வெயில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் என்கிற அளவில் பதிவாகியிருந்தது. இதனால் மக்கள் கடும் அவதியுற்றனர். ஆனால், தற்போது மழை தீவிரமடைந்து வருகிறது.

சென்னை தொடங்கி டெல்டா, கொங்கு, தென் மாவட்டங்கள் என மழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்நிலையில் அடுத்த 5 நாட்களுக்கு குறிப்பிட்ட சில மாவட்டங்களுக்கு ரெட் மற்றும் மஞ்சள் அலர்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது.
அதாவது இன்று மதியம் 12.30 மணி தொடங்கி 17ம் தேதி காலை 8.30 வரை தஞ்சாவூர், புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருக்கிறது. அதேநேரம், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, சிவகங்கை மற்றும் திருவாரூர் மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டிருக்கிறது.
இது தவிர, தென்காசி, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், நாகை, மயிலாடுதுறை மற்றும் கடலூர் மாவட்டத்திற்கும், காரைக்கால், கேரளா, தென் உள் கர்நாடகா, கடலோர ஆந்திரா, ராயலசீமா மற்றும் தெலங்கானா ஆகியவற்றிற்கு மஞ்சள் அலர்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது.
இரண்டாம் நாளான 17-18ம் தேதியில் கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, தேனி ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது. விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, திண்டுக்கல், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, திருப்பூர், கோவை, நீலகிரி, ஈரோடு மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது.
மூன்றாம் நாளான 18-19ம் தேதிகளில் குமரி, நெல்லை, தென்காசி, தேனி, கோவை, நீலகிரிக்கு ஆரஞ்சு அலர்ட்டும், திருப்பூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, காரைக்கால், திருச்சி, கரூர், நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்டும் விடுக்கப்பட்டிருக்கிறது.
நான்காம் நாளான 19-20ம் தேதிகளில், கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, குமரி மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்டும், திருப்பூர், ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருச்சி, நாமக்கல், கரூர், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, மதுரை, விருதுநகருக்கு மஞ்சள் அலர்ட்டும் கொடுக்கப்பட்டிருக்கிறது.
ஐந்தாம் நாளான 20-21ம் தேதிகளில் கோவை, நீலகிரி, திண்டுக்கல், தேனி, தென்காசி, நெல்லை, குமரி, ஈரோடு, திருப்பூர், மதுரை, விருதுநகர், தூத்துக்குடிக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டிருக்கிறது.
திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், கரூர், நாமக்கல், திருச்சி, தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, நாகை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டிருக்கிறது.
மஞ்சள், ஆரஞ்சு அலர்ட் விளக்கம்: 64.5 மி.மீ முதல் 115. 5 மி.மீ வரை மழை பெய்யும் என எதிர்பார்க்கப்பட்டால், மஞ்சள் அலர்ட் விடுக்கப்படும். இதுவே, ஒரு நாளில் 115.6 முதல் 204.4 மிமீ வரையிலான மழைப்பொழிவுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்படும். 24 மணி நேரத்தில் 204.5 மிமீக்கு அதிகமாக மழை பெய்யும் போது ரெட் அலர்ட் விடுக்கப்படுகிறது.
-
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
அண்ணாமலைக்கே பேரதிர்ச்சி! "சிங்கம் கர்ஜிக்க காத்திருக்கிறது" போஸ்டர் ஒட்டி உசுப்பேற்றும் ஆதரவாளர்கள் -
லேட்டாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை.. இந்த ஆண்டு கொஞ்சம் சிக்கல்தான்! IMD கொடுத்த வார்னிங்! -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
Annamalai: பாஜக தலைவர்களுக்கு சுமையாக இருக்க விரும்பவில்லை! அண்ணாமலை உருக்கம்! -
2020-ல் ரஜினி தொடங்கவிருந்த கட்சியில் இணையுமாறு கேட்டார்! நான் மறுத்துவிட்டேன்! அண்ணாமலை பரபரப்பு -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
என் கட்சியில் நான் உள்பட யாரும் நிரந்தர எம்பி, எம்எல்ஏவாக இருக்க மாட்டார்கள்! அண்ணாமலை திட்டவட்டம்! -
Vetri Payanam: கன்னியாகுமரி டூ சென்னை வரை பெண்களுக்கு இலவச பஸ் பயணம்! அறிவிக்கிறாரா முதல்வர் விஜய்? -
ஏற்கனவே அவிஞ்சு போய் கிடக்கு.. மேற்கொண்டு வெறியைக் கிளப்பும் எல்-நினோ! ஆகஸ்ட் வரை வெயில் தானாம்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்?











Click it and Unblock the Notifications