வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. சென்னை டூ குமரி வரை.. அடுத்த 1 மணி நேரம் மழை வெளுத்து வாங்கும்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று காலை 10 மணி வரை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராமநாதபுரம் உள்பட 8 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

தமிழகத்தில் இன்று காலையிலேயே 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் கூறியுள்ளது. நேற்றும் தமிழகத்தில் தென் மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. வரும் 16 ஆம் தேதி வரை மிதமான மழையே தமிழகத்தில் இருக்கும் என்றும், அதற்கு பிறகு தான் அதாவது 17, 18 ஆம் தேதிக்கு பிறகு தான் கனமழை ஆரம்பிக்கும் எனவும் வானிலை மையம் கூறியிருந்தது.

low-level-atmospheric-circulation-heavy-rain-expected-from-chennai-to-kanyakumari-in-the-next-one-h

காலை 10 மணி வரை

இதனால் இன்று முதல் அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் பெரிதாக மழை இருக்காது என கூறப்பட்டிருந்தது. இந்த நிலையில் இன்று காலை 10 மணி வரை சென்னை உள்பட 8 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதில் கூறப்பட்டிருப்பதாவது:-

"தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தமிழகத்தில் இன்று காலை 10 மணி வரை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தூத்துக்குடி, நெல்லை, குமரி ஆகிய 7 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கும், ராமநாதபுரம் மாவட்டத்தில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளது" என்று கூறப்பட்டுள்ளது.

மிதமான மழையே தொடரும்

தமிழகத்தில் இன்று முதல் வரும் 15 ஆம் தேதி வரை, ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் 16 ஆம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

17 ஆம் தேதி தமிழகத்தில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 18 ஆம் தேதி தமிழகத்தில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, இராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையில் இன்று கிளைமேட் எப்படி?

சென்னையில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33" செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்" என்று கூறப்பட்டுள்ளது.

மழை அளவு

நேற்று தமிழகத்தில் பதிவான மழை அளவு: மைலாடி (கன்னியாகுமரி) 13, உடுமலைப்பேட்டை (திருப்பூர்), மடத்துக்குளம் (திருப்பூர்) தலா 6 எழுமலை (மதுரை) 5, ஸ்ரீவில்லிபுத்தூர் (விருதுநகர்) 4 செமீ, மூலைக்கரைப்பட்டி (திருநெல்வேலி), திருநெல்வேலி AWS (திருநெல்வேலி), சிவகிரி (தென்காசி), அருப்புக்கோட்டை (விருதுநகர்), கன்னிமார் (கன்னியாகுமரி) திருமூர்த்தி அணை (திருப்பூர்). பெரியாறு (தேனி), திருமூர்த்தி 18 (திருப்பூர்), பாளையம்கோட்டை (திருநெல்வேலி), திருநெல்வேலி (திருநெல்வேலி), அருப்புக்கோட்டை KVK AWS (விருதுநகர்). கோவிலங்குளம் (விருதுநகர்). தேக்கடி (தேனி) தலா 3 செமீ மழை பெய்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+