Low Pressure: அடுத்த ஒரு மணி நேரம் மழை விடாது.. கோவை டூ தென்காசி வரை 17 மாவட்டங்களில் பிச்சு உதறும்!
சென்னை: தமிழகத்தில் அடுத்த 1 மணி நேரத்திற்கு 17 மாவட்டங்களில் பலத்த காற்று மற்றும் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக கோவை, சேலம், ஈரோடு, கரூர், திண்டுக்கல், திருச்சி, நெல்லை, தென்காசி, மதுரை என 17 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை வெளுத்து வாங்கப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே வெயில் கொளுத்து எடுத்து வருகிறது. தினம் தினம் வெயிலின் அளவு உக்கிரமாகிக் கொண்டே வந்தது. தென் மாவட்டங்களிலும் வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் நேற்று அப்படியே கிளைமேட் மாறியது. தென் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நேற்று மாலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

அடுத்த ஒரு மணி நேரம்
ஒரு சில இடங்களில் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்தது. இதேபோன்று கோவை, ஈரோடு, நீலகிரியில் ஒரு சில இடங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. கோடை வெயிலுக்கு இதமாக மழை கொட்டித் தீர்த்தது. இந்த நிலையில் இன்று முதல் அடுத்த ஒரு வாரத்திற்கு தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் கூறியிருந்தது. தற்போது அடுத்த 1 மணி நேரத்தில் 17 மாவட்டங்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக வானிலை மையம் கூறுகையில், "தமிழகத்தில் அடுத்த ஒரு மணி நேரத்திற்கு அதாவது மாலை 4 மணி வரை, சேலம், ஈரோடு, தருமபுரி, கோவை, திண்டுக்கல், நீலகிரி, திருப்பூர், தேனி, மதுரை, திருச்சி, கிருஷ்ணகிரி, நாமக்கல், கரூர், திருப்பத்தூர், விருதுநகர், தென்காசி மற்றும் நெல்லை ஆகிய 17 மாவட்டங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மழை வெளுத்து வாங்கும். மழையின் காரணமாக ஒரு சில இடங்களில் தண்ணீர் தேங்கவும் வாய்ப்பு உள்ளது" என்று கூறப்பட்டுள்ளது.
காற்றழுத்த தாழ்வு பாதை
முன்னதாக வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- தமிழகத்தை பொறுத்தவரை நேற்று தென் தமிழகம், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது.
மரத்வாடா முதல் தென்தமிழகம் வரை உள் கர்நாடகா வழியாக சுமார் 0.9 கிமீ உயரத்தில் ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது. இதனால் இன்று தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். குறிப்பாக கோவை, நீலகிரி மற்றும் தேனி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
ஈரோடு, தேனியில் கனமழை பெய்ய வாய்ப்பு
நாளை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, ஈரோடு மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை மறுநாள் தென்தமிழகதில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். விருதுநகர், மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இடி, மின்னலுடன் மழைக்கு சான்ஸ்
வரும் 7 ஆம் தேதி தமிழக கடலோர மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
8 ஆம் தேதி தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 9, 10 ஆம் தேதிகளில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்" என்று கூறப்பட்டுள்ளது.
-
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
பொதுமக்களே உஷார்! இன்று 22 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை.. மஞ்சள் அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications