உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி.. இன்னைக்கு கனமழை விடாது.. தென் மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!
சென்னை: தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் எனவும், தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நெல்லை, தென்காசி, குமரி, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம் ஆகிய 6 மாவட்டங்களில் மிக கனமழைக்கும், ஈரோடு, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கும் வாய்ப்பு உள்ளது என கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நேற்று வடகிழக்கு பருவமழை தொடங்கியது. தொடங்குவதற்கு முன்பே தென் மாவட்டங்களில் மிக கனமழை பெய்யத் தொடங்கியது. கடந்த ஒரு வாரமாகவே தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று தமிழகம் முழுக்க மழை கொட்டியது. இன்றும் காலையில் இருந்தே தென் மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது.

இந்த நிலையில் இன்றும் தமிழகத்தில் 6 மாவட்டங்களில் மிக கனமழைக்கும், 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது. அதாவது தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது.
இதனால் தமிழகத்தில் இன்று நெல்லை, தென்காசி, குமரி, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம் ஆகிய 6 மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதேபோல் ஈரோடு, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், மதுரை, சிவகங்கை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, நீலகிரி ஆகிய 13 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று வானிலை மையம் கூறியுள்ளது.
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications