வங்கக் கடலில் இருக்குது சம்பவம்.. உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.. எங்கெல்லாம் மழை?
சென்னை: வடக்கு அந்தமான் கடல் பகுதி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று ஏற்படும் வளிமண்டல சுழற்சி காரணமாக, நாளை மறுநாள் வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் உள் மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவித்துள்ளது.
மேற்கு திசை காற்று மாறுபாடு காரணமாக தமிழகத்தின் ஒருசில இடங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. ஆனால் கடந்த ஒரு வாரமாக பெரும்பாலான இடங்களில் வெயில் கொளுத்தி எடுக்கிறது. குறிப்பாக மதிய நேரங்களில் வெளியே செல்லக் கூட யோசிக்கும் அளவிற்கு வெப்பம் அனலாக தகிக்கிறது.

தமிழகத்தில் நேற்று மட்டும் 9 இடங்களில் வெயில் சதமடித்தது. அதிகபட்சமாக மதுரை நகரம் மற்றும் மதுரை விமான நிலையத்தில் 103 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது. இதேபோன்று சென்னையில் மீனம்பாக்கம், நுங்கம்பாக்கம், நாகை, ஈரோடு, பாளையங்கோட்டை, தஞ்சை, திருச்சி, பரங்கிப்பேட்டை பகுதிகளில் நேற்று வெயில் சதமடித்தது. தொடர்ந்து வெயிலானது 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை உயரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் வங்கக் கடலில் நாளை மறுநாள் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் கூறுகையில், வடக்கு அந்தமான் பகுதி மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் இன்று வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகின்றது. இதன் காரணமாக வடமேற்கு மற்றும் மத்திய வங்கக்கடல் பகுதியில் நாளை மறுநாள் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகக் கூடும்.
இதன் காரணமாக அடுத்த சில நாட்கள் தமிழகத்தின் உள் மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதேபோன்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறுகையில், தமிழகத்தில் ஒருசில இடங்களில் வெப்பநிலையானது 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை உயர வாய்ப்புள்ளது.
அதே நேரத்தில் தமிழகத்தில் வரும் 26ஆம் தேதி வரை ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. சென்னையை பொறுத்தவரை வெப்பநிலையானது அதிகபட்சமாக 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவாக வாய்ப்புள்ளது. அதே நேரத்தில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
சென்னையில் இரவு நேரங்களில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவது ஏன்? அதிகாரிகளுக்கு மட்டுமே தெரிந்த உண்மை -
கார் விற்பனையில் மாஸ் காட்டும் கொங்கு மண்டலம்.. கோவை, பொள்ளாச்சி, திருப்பூர்காரங்க வேற ரகம் பாஸ்..! -
சென்னை மக்கள் பொறுமை இழந்தனர்.. கட்டி முடிச்சு 4 மாசமாச்சு.. எப்ப தான் திறப்பீங்க! -
டமால் டுமீல் தான்.. 4 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப் போகுது கனமழை! மார்க் செய்த வானிலை ஆய்வு மையம்! -
அடித்து பெய்யப்போகும் கனமழை! கோவை டூ கன்னியாகுமரி.. 7 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! -
சென்னையில் முதல்வர் விஜய் தொகுதியான பெரம்பூரில் அடிக்கடி மின் வெட்டு.. பொங்கி எழுந்த மக்கள் -
சென்னை உட்பட.. 15 மாவட்டங்களுக்கு மழை! உஷார் மக்களே.. வானிலை மையம் வார்னிங்! -
திமுக ஆட்சியில் போடப்பட்ட டெண்டர் ரத்து? ரூ.2,100 கோடி ECR திட்டத்திற்கு முட்டுக்கட்டை போட்ட விஜய் -
இன்னைக்கும் மழை விடாது.. 14 மாவட்டங்களில் வெளுக்க போகுது! சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை மையம் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்!












Click it and Unblock the Notifications