விலகாத வடகிழக்கு பருவமழை! ஜன.6 ல் வங்கக் கடலில் புதிய காற்றழுத்தம்! எந்தெந்த மாவட்டங்களில் கனமழை?
சென்னை: தென்மேற்கு வங்கக் கடலில் ஜனவரி 6ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்தம் மேலும் தீவிரமடையுமா என்பது குறித்தும் தெளிவுப்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் 3 ஆவது வாரம் தொடங்கியது. இது தொடங்கி உருவான ஒரு புயல் ஆந்திரா பக்கம் சென்றுவிட்டது. இன்னொன்று டிட்வா, போக்கு காட்டிவிட்டு கடலோர பகுதிகளில் பயணித்தது. இந்த டிட்வா ஓரளவுக்கு மழையை கொடுத்தது.

தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் கடும் சேதாரத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இந்த டிட்வாவுடன் மார்கழியும் பிறந்துவிட்டதால் வெறும் பனிப்பொழிவு மட்டுமே இருந்து வருகிறது.
அதிலும் ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட பகுதிகளில் வெப்பநிலை மைனஸில் சென்றுவிட்டதால் அங்கு உறைபனி உள்ளது. எனினும் தமிழகத்தில் கடந்த இரு வாரங்களாகவே அந்த அளவுக்கு மழை இல்லை.
இந்த நிலையில் டிசம்பர் 31 ஆம் தேதி இரவு சென்னை உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது. இதனால் அன்றைய தினம் புத்தாண்டு கொண்டாட்டங்கள் தடைப்பட்டது. எனினும் மக்கள் மழையில் நனைந்தவாறு புத்தாண்டை கொண்டாடி மகிழ்ந்தனர்.
டிட்வா புயலுடன் சென்னைக்கான மழை இல்லாத நிலை ஏற்பட்டு ஏமாற்றம் தந்ததாக பல வானிலை ஆய்வாளர்கள் வேதனை தெரிவித்திருந்தனர். வரும் கோடை காலத்தில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுமோ என்ற கேள்வியும் எழுந்தது.
இந்த நிலையில் ஜனவரி 6ஆம் தேதி தென் மேற்கு வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகிறது. இதனால் டெல்டா, தென் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் கணித்துள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறாது என்றும் கணித்துள்ளது. இதனால் பெரிய மழையை எதிர்பார்க்க முடியாது. அதிலும் தென்மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் மட்டுமே கனமழை பெய்யக் கூடும். வடகிழக்கு பருவமழை தமிழகத்தை விட்டு விலகாத நிலையில் தற்போது புதிய காற்றழுத்தம் உருவாகிறது.
தமிழகத்தில் சில இடங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அதன் அறிக்கையில், தமிழகத்தில், கடந்த 10 நாட்களாக, மழை இல்லாத நிலையில், நேற்று முன்தினம் இரவு முதல், நேற்று அதிகாலை வரை, பரவலாக மழை பெய்துள்ளது. நேற்று காலை வரையிலான, 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக சென்னை பெரம்பூரில், 11 செ.மீ., மழை பெய்துள்ளது.
லட்சத்தீவு - குமரிக்கடல் பகுதிகளின் மேல், ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இலங்கை கடலோரப் பகுதிகளுக்கு அப்பால், தென் மேற்கு வங்கக்கடல் பகுதியில், ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
தமிழகத்தில் சில இடங்கள் மற்றும் புதுச்சேரியில், இன்று இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழகத்தின் வட மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில், அதிகாலை லேசான பனி மூட்டம் காணப்படும். தமிழகம் மற்றும் புதுச்சேரியில், சில இடங்களில், குளிர் காற்று காரணமாக, குறைந்தபட்ச வெப்பநிலை, இயல்பை விட 4 டிகிரி செல்ஷியஸ் வரை, குறைவாக பதிவாகக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேக மூட்டமாக காணப்படும். சில இடங்களில், அதிகாலை லேசான பனிமூட்டம் காணப்படும். சில இடங்களில், லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இவ்வாறு தெரிவித்துள்ளது.
-
தமிழகத்தின் முதல் பி.ஆர்.டி.எஸ்.. சென்னையில் பிரம்மாண்ட போக்குவரத்து மாற்றம்.. பணிகள் ஸ்டார்ட்! -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்!












Click it and Unblock the Notifications