அடுத்த ரவுண்டு ரெடி.. வலுப்பெற்றது காற்றழுத்த தாழ்வு மண்டலம்.. டெல்டாவிற்கு காத்திருக்கும் சம்பவம்
சென்னை: வங்க கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. அடுத்த 2 நாட்களில் வடமேற்கு திசையில் தமிழ்நாடு - இலங்கை கடலோர பகுதி நோக்கி நகரக் கூடும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது. இன்று இரவு முதல் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்க கடலில் நிலை கொண்டிருந்த ஆழந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. தெற்கு வங்க கடலில் மத்திய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி மையம் கொண்டுள்ளது.

இதன் காரணமாக தமிழகத்தில் இன்று மாலைக்கு பின் மழை படிபடியாக அதிகரிக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக மயிலாடுதுறை, நாகபட்டின, தஞ்சாவூர், திருவாரூர்,மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதேபோல் சென்னையில் நாளை மறுநாள் முதல் மழை வெளுத்து வாங்க வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம் கணித்துள்ளது. இன்று சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது.
தமிழகத்தில் இன்று நெல்லை, தூத்துக்குடி, குமரி ஆகிய மாவட்டங்களில் காலையில் லேசான மழை பெய்தது. இதேபோன்று டெல்டா மாவட்டங்களில் ஒருசில இடங்களில் லேசான மழை விட்டு விட்டு பெய்தது. தொடர்ந்து இன்று மாலையில் இருந்து மழை அதிகரிக்கும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
லேட்டாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை.. இந்த ஆண்டு கொஞ்சம் சிக்கல்தான்! IMD கொடுத்த வார்னிங்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்?












Click it and Unblock the Notifications