டார்க்கெட் தென்தமிழகம்.. 2 நாள் இடி மின்னலோடு கனமழை! உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி
சென்னை: தென்கிழக்கு வங்கக்கடலில் நவம்பர் 14ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது எனவும், இது நவம்பர் 16ல் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற உள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தென்தமிழகத்தில் 2 நாட்கள் இடி மின்னலோடு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை காலம் தொடங்கி உள்ளது. இதனால் தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களான கோவை, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது.

அதேபோல் மாநிலத்தில் பிற மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதனால் தீபாவளி பண்டிகையின்போது மழை வருமா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
இதற்கிடையே தான் இந்திய வானிலை ஆய்வு மையம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது வரும் 14ம் தேதின தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் எனவும் தென்தமிழகத்தில் 2 நாட்கள் இடி மின்னலுடன் மழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளதாவது:
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி வரும் 14ம் தேதி உருவாக்க கூடும். இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நவம்பர் 16ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும். இதற்கிடையே தான் நவம்பர் 14, 15 ஆகிய 2 நாட்கள் கடலோர ஆந்திரா, தென்தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் இடி மின்னலுடன் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது என கூறப்பட்டுள்ளது.
மேலும் 14ம் தேதி தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனையொட்டிய அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோமீட்டர் வேகத்திலும், இடையிடையே 55 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். அதேபோல் 15ம் தேதி மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகள், அதையொட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் தென்மேற்கு, தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்கு 40-45 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இதனால் இந்த 2 நாட்களும் மீனவர்கள் அந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தமட்டில் அடுத்த 24 மணிநேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை என்பது 31-32 டிகிரி செல்சியஸாகவும் குறைந்தபட்ச வெப்பநிலை என்பது 24-25 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
18 மணிநேரம் தடையில்லா மின்சாரம்.. விவசாயிகளுக்கு சூப்பர் திட்டத்தை அறிவித்த முதலமைச்சர் விஜய்! -
தலைமை செயலகத்தில் நெகிழ்ச்சி! சிறுவனை வாரி அணைத்து உணவூட்டிய அமைச்சர் வன்னியரசு.. உருகிய மக்கள் -
கரப்பான் பூச்சி கட்சிக்கு தாவும் Gen-Z! ஏமாந்துவிடக்கூடாதாம்.. உஷார் சொல்லும் வீரமணி! -
சென்னை மக்களே! ரேஷன் அட்டையில் திருத்தம் செய்யணுமா? செம சான்ஸ்.. இன்னைக்கு மிஸ் பண்ணாதீங்க! -
இது லிஸ்ட்லயே நம்ம இல்லையே! மொத்தமாய் மாற்றும் விஜய்.. தனியார் கைக்கு போகும் டாஸ்மாக்! எப்போது? -
“ஏன் நடவடிக்கை எடுக்க கூடாது?” ராஜினாமா செய்த 4 அதிமுக எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ் -
டெல்டாவில் கனமழை.. தஞ்சை, திருவாரூர் மக்கள் உஷார்! அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
கண்களை இருட்டாக்கும் சூரிய கிரகணம்.. 27 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் அதிசயம்! இந்தியாவில் தெரியுமா? -
அரசு பள்ளியில் தவெக எம்எல்ஏ மகளுக்கு அட்மிஷன்! இப்படித்தான் இருக்கனும்.. குவியும் பாராட்டு! -
மக்கள் தலையில் விழுந்த இடி.. அதிரடியாக உயர்ந்த லாரி வாடகை! எந்தெந்த ஊருக்கு எவ்வளவு தெரியுமா? ஷாக்! -
கோவை தொடங்கி.. குமரி வரை 4 மாவட்டங்களில் கனமழை! மஞ்சள் அலர்ட் கொடுத்த வானிலை மையம்! -
நீலகிரி டூ கன்னியாகுமரி வரை.. கொட்டி தீர்க்கப்போகும் கனமழை! 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்












Click it and Unblock the Notifications