சென்னை உட்பட 4 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை.. நகர தொடங்கிய தாழ்வு மண்டலம்.. இன்றுதான் ஆட்டமே!

Subscribe to Oneindia Tamil

சென்னை: வங்கக் கடலில் உருவான புயல் சின்னம் காரணமாக தமிழ்நாட்டில் பலத்த மழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னைக்கு இன்று கனமழைக்கான மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், நாகப்பட்டினத்திற்கும் மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

Low Pressure is moving, Chennai and other parts of Tamil Nadu to see a heavy rain today

வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. 13 கி.மீ. வேகத்தில் நகரும் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் சென்னையில் கனமழை பெய்து வருகிறது. வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் 13 கி.மீ. வேகத்தில் கரையை நோக்கி நகர்ந்து வருகிறது.

விசாகப்பட்டினத்திலிருந்து சுமார் 400 கி.மீ. தென்கிழக்கு திசையில் தற்போது நிலை கொண்டுள்ளது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி ஆந்திரா, ஒடிசா, மேற்கு வங்கம் நோக்கி நகர்ந்து வருகிறது. வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக 9 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது.

வானிலை மைய எச்சரிக்கை; தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி. மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, நேற்று (15-11-2023) காலை 08.30 மணி அளவில் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக, விசாகப்பட்டினத்திலிருந்து சுமார் 510 கிலோ மீட்டர் தென்கிழக்கே நிலை கொண்டுள்ளது.

இது வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று 16-ஆம் தேதி வாக்கில் ஆந்திர கடலோரப்பகுதிகளை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வடக்கு- வடகிழக்கு திசையில் திரும்பி ஒரிசா கடலோர பகுதிகளை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் 17-ஆம் தேதி வாக்கில் நிலவக்கூடும். இது 18-ஆம் தேதி காலை வடக்கு ஒரிசா - மேற்கு வங்க கடலோரப்பகுதிகளில் நிலவக் கூடும்.

இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று கடலோர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களிலும், உள்தமிழக மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, தஞ்சாவூர். திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்கள். புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

17.11.2023 முதல் 19.11.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
20.11.2023 மற்றும் 21.11.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:

அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரில் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அவ்வப்போது ஒரு சில இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 27 செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23-24 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும்.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 27-28 செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்): டிஜிபி அலுவலகம் (சென்னை) 12, வேளாங்கண்ணி (நாகப்பட்டினம்). கோடியக்கரை (மயிலாடுதுறை), காரைக்கால் (காரைக்கால்) தலா 11. அம்பத்தூர் (சென்னை), சென்னை ஆட்சியர் அலுவலகம் (சென்னை), மண்டலம் 10 கோடம்பாக்கம் (சென்னை) தலா 9, மண்டலம் 01 சுத்திவாக்கம் (சென்னை), சோழிங்கநல்லூர் (சென்னை), மகாபலிபுரம் (செங்கல்பட்டு), நாகப்பட்டினம் (நாகப்பட்டினம்), இந்துஸ்தான் பல்கலைக்கழகம் ARG (காண்சிபுரம்). மண்டலம் 12 ஆலந்தூர் (சென்னை), மண்டலம் 13 அடையார் சுற்றுச்சுழல் பூங்கா (சென்னை), அண்ணா பல்கலைக்கழகம் ARG (சென்னை) தலா 8, வேதாரண்யம் (நாகப்பட்டினம்), மண்டலம் 08 அண்ணாநகர் (சென்னை), சென்னை நுங்கம்பாக்கம் (சென்னை), CD மருத்துவமனை தண்டையார்பேட்டை (சென்னை). சென்னை விமானநிலையம் (சென்னை), மண்டலம் 09 அளவு மழை பெய்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+