48 மணி நேரத்தில் தொடங்கும் வடகிழக்கு பருவமழை? அரபிக் கடலில் 19ல் காற்றழுத்தம்! வெதர் அப்டேட்!
சென்னை: அக்டோபர் 19ஆம் தேதி அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாக வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் கேரளா மற்றும் சுற்றியுள்ள மாநிலங்களில் மழை பெய்யக் கூடும் என்றும் தெரிவித்துள்ளது. மேலும் அடுத்த 48 மணி நேரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்புள்ளதாக சொல்லப்பட்டுள்ளது.
இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: அரபிக் கடலின் மீது வளிமண்டல சுழற்சி நிலவுவதால் வரும் 19ஆம் தேதி குறைந்த காற்றழுத்தம் உருவாக வாய்ப்பிருக்கிறது.

இதனால் கேரளா, கர்நாடகாவின் உள்மாவட்டங்கள், தமிழகம், ஒடிஸா, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும். ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. இந்த மாவட்டங்களில் காற்றானது மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் வீசும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அரபிக் கடலில் காற்றழுத்தம் உருவாக வாய்ப்புள்ளதால் கேரளாவில் கனமழை பெய்யக் கூடும் என்பதால் அங்கு பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகளை எடுக்க அறிவுறுத்தப்படுகிறது. வரும் 18 ஆம் தேதி வரை லேசான முதல் கனமழை பெய்யக் கூடும்.
பல்வேறு மாவட்டங்களில் 64.5 மி.மீ. முதல் 115.5 மி.மீ. வரை மழை பெய்யும். ஆந்திரா, தமிழக கடலோர பகுதிகளில் கூட கணிசமான மழையை எதிர்பார்க்கலாம். ஒடிஸாவில் கனமழை பெய்யக் கூடும்.
அக்டோபர் 16ஆம் தேகி ஒடிஸா, விதர்பா, சத்தீஸ்கர் ஆகிய பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய கூடும். அஸ்ஸாம், மேகாலயா, மணிப்பூர், நாகலாந்து, திரிபுரா, மிசோரம் ஆகிய மாநிலங்களிலும் அனேக இடங்களில் இடி , மின்னலுடன் கூடிய மழை பெய்யக் கூடும்.
டெல்லியில் காலையில் வெயில் இருக்கும். மாலைக்கு பிறகு மேற்கத்திய காற்று வீசுவதால் குளிரத் தொடங்கும். இவ்வாறு வானிலை மையம் தெரிவித்துள்ளது.
ஆந்திர மாநிலத்தில் தற்போது பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில் காக்கிநாடா அருகே உள்ள ஏனாம் பகுதியில் நேற்று முதல் மழை பெய்துக் கொண்டே இருக்கிறது. இதனால் நீர் நிலைகள் நிரம்பி வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துவிட்டது.
குருத்துப்பேட்டை எனும் கிராமத்தில் சூரிய நாராயணன் என்பவர் வீட்டில் சுவர் விரிசல் விட்டுள்ளது. எனினும் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. அங்கு பள்ளிகளில் பருவ தேர்வு நடந்து கொண்டிருப்பதால் பள்ளிகளுக்கு விடுமுறை விடவில்லை. நேற்று காலை முதல் இன்று காலை 8 மணி நிலவரம் வரை 86.40 மி.மீ. மழை பெய்துள்ளது.
சூரசம்பேட்டா கிராமத்தில் கட்டடத்தின் தூண் இடியுடன் இடிந்து விழுந்தது. மேலும் பல்வேறு வீடுகளில் மழை நீர் புகுந்துவிட்டது. வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பே வீடுகளில் தண்ணீர் புகும் நிலை உள்ளது. இன்னும் தொடங்கிவிட்டால்!
-
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
கோவை, நீலகிரியில்.. கன முதல் மிக கனமழை பெய்யும்! மொத்தம் 11 மாவட்டங்களுக்கு வார்னிங்! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி












Click it and Unblock the Notifications