"பருத்தி மூட்டை" காற்றழுத்தம்! தமிழகத்திற்கு இதயத்தை காட்டுதே.. அது சரி மழை இருக்கா! வெதர்மேன் நறுக்
சென்னை: வங்கக் கடலில் நிலவி வந்த காற்றழுத்தம் தமிழகத்தை நோக்கி வருமா.. தமிழ்நாட்டிற்கு மழை இருக்குமா என்பது குறித்துத் தொடர்ந்து சஸ்பென்ஸ் தான் நிலவி வந்தது. ஏனென்றால் அது நடுக்கடலுக்குச் சென்று அங்கேயே வலுவிழந்தும் இருந்தது. இதற்கிடையே தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் தான் இதற்கான விளக்கத்தைக் கொடுத்துள்ளார். தமிழகத்தில் எப்போது மழை என்பது குறித்த தகவல்களையும் அவர் பகிர்ந்துள்ளார்.
தமிழ்நாட்டில் கடந்த சில காலமாகவே நல்ல மழை பெய்து வருகிறது. இந்த பருவமழை சீசனில் இயல்பைக் காட்டிலும் அதிகமாகவே மழை பெய்துள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதனால் முக்கிய நீர்நிலைகள் நிரம்பி வருவது ஒரு நல்ல செய்தியாகவே இருக்கிறது. இந்தச் சூழலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வங்கக்கடலில் மீண்டும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஏற்பட்டது.
காற்றழுத்தம்:
அது கடந்த சில நாட்களுக்கு முன்பு காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற நிலையில், மீண்டும் காற்றழுத்த தாழ்வு நிலையாக கடந்த சில நாட்களுக்கு முன்பு வலுவிழந்தது. நேற்று தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், தெற்கு ஆந்திர - வடதமிழக கடலோர பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, இன்று (24-12-2024) காலை 0830 மணி அளவில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில், தெற்கு ஆந்திர - வடதமிழக கடலோர பகுதிகளில் நிலவுகிறது.
இதற்கிடையே இந்த காற்றழுத்தம் தமிழகம் நோக்கி வருமா.. இதனால் தமிழகத்தில் மழை இருக்குமா என்பது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். இப்போது காற்றழுத்தம் இதய வடிவில் இருக்கும் நிலையில், தமிழகத்திற்கு இதயத்தைத் தரும் காற்றழுத்தம் என்ற தலைப்பில் அவர் இதைப் பகிர்ந்துள்ளார்.
தமிழ்நாடு வெதர்மேன்:
இது தொடர்பாகத் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது எக்ஸ் பக்கத்தில், "நமது பருத்தி மூட்டை குறைந்த காற்றழுத்தம் (91 பி) வெஸ்டெர்லி டர்ஃப் காரணமாக இழுத்துச் செல்லப்பட்டது. மத்திய திறந்தவெளி கடலில் குறைந்த காற்றழுத்தம் கைவிடப்பட்டது. பின்னர் தாழ்வான பகுதியைக் காற்று துண்டித்து, லோவர் லெவல் சுழற்சியை (எல்எல்சி) ஏற்படுத்தி இருக்கிறது. இப்போது குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலைக்கு உதவிக்கு ஆள் இல்லை. அது வலுவிழந்த நிலையில், தமிழகம் நோக்கி வந்துள்ளது

தமிழகம் எந்த ஒரு காற்றழுத்த தாழ்வு நிலையையும் கைவிடாது.. குறைந்த காற்றழுத்தத்தை எப்போதும் அன்புடன் வரவேற்றே இருக்கிறது. பதிலுக்கு இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை தனது நன்றியை வெளிப்படுத்த உள்ளது.. இதன் காரணமாக வரும் 26 மற்றும் 27 தேதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாகத் தமிழகத்தில் இயல்பான மற்றும் மகிழ்ச்சிகரமான மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. கிறிஸ்துமஸ் தினத்தன்றும் சில தனிமைப்படுத்தப்பட்ட இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது" என்று பதிவிட்டுள்ளார்.
வானிலை மையம்:
முன்னதாக வானிலை மையம் இன்று வெளியிட்டிருந்த தினசரி செய்திக்குறிப்பில், "இன்று வடதமிழக கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும், இதர தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்" என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
பொதுமக்களே உஷார்! இன்று 22 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை.. மஞ்சள் அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
வெளுத்து வாங்கப் போகும் கனமழை! இரவோடு இரவாக 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! வானிலை மையம் எச்சரிக்கை -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications