அரபிக்கடலில் புயல் சின்னம்! தமிழகத்தில் மழை கொட்டுமா? வானிலை மையம் சொன்னதை பாருங்க!
சென்னை: தமிழ்நாட்டில் பரவலாக வெயிலின் தாக்கம் அதிகரித்திருக்கிறது. வேலூரில் அதிகபட்சமாக 104 டிகிரி பாரன்ஹீட் வரை வெயில் பதிவாகியிருக்கிறது. இந்நிலையில், அரபிக்கடலில் புதிய புயல் சின்னம் உருவாக இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் சொல்லியிருக்கிறது. இதான் தமிழகத்தில் மழை பெய்யுமா? என்பது குறித்தும் விளக்கமளித்துள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், தென்கிழக்கு அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக கூறியிருக்கிறது. இது மே மாதம் இரண்டாவது வாரத்தில் உருவாகும் என்றும் தெரிவித்திருக்கிறது.

அரபிக்கடலுக்கும் தமிழ்நாட்டுக்கும் சம்பந்தம் கிடையாது. எனவே அங்கு வானிலை மாற்றம் நடந்தால், கேரளாவில்தான் மழை கொட்டும். தமிழ்நாட்டுக்கு மழை இருக்குமா? என்பது டவுட்தான்.
இருப்பினும் இந்திய வானிலை ஆய்வு மையம், அரபிக்கடலில் உருவாகும் புயல் சின்னம் காரணமாக தமிழ்நாட்டில் கோடை மழையின் தாக்கம் அதிகரிக்கும் என்று தெரிவித்திருக்கிறது. மண்டையை பொளக்கும் வெயிலுக்கு நடுவே இப்படி ஒரு அப்டேட்டை வானிலை மையம் கொடுத்திருப்பது, தமிழக மக்களின் வயிற்றில் பாலை வார்த்திருக்கிறது.
மே 2வது வாரத்தில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதியானது வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக, புயலாக மாறுமா என்பதை இப்போதைக்கு சொல்ல முடியாது என்று தெரிவித்திருக்கும் இந்திய வானிலை மையம், இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் மழை பெய்யும் என்றும் கூறியிருக்கிறது.
முன்னதாக நேற்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருந்த அறிவிப்பில், சுமார் 0.9 கிமீ உயரத்தில், தெற்கு உள் கர்நாடகா முதல் மன்னார் வளைகுடா வரை, தமிழகம் வழியாக ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது என்றும், இதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
குறிப்பாக நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications