மதுரை மக்கள் வெளியில் தலைகாட்ட முடியல.. கொளுத்தி எடுத்த வெயில்.. இன்று தமிழ்நாட்டிலேயே டாப்!
மதுரை: மதுரையில் இன்று 104 டிகிரி பாரன்ஹீட் வெயில் சுட்டெரித்தது. தமிழ்நாட்டில் இன்று அதிகபட்சமாக மதுரையில் 104 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியுள்ளது. மதுரையில் வாட்டி எடுத்த கடும் வெயிலால் மக்கள் மிகவும் அவதிப்பட்டனர். தமிழகத்தில் இன்று 7 இடங்களில் வெயில் சதம் அடித்துள்ளது.
ஏப்ரல் மற்றும் மே ஆகிய கோடை மாதங்களில் தமிழகத்தில் கடும் வெயில் சுட்டெரித்தது. ஜூன் மாதம் தென்மேற்கு பருவமழை தொடங்கி மழை பெய்ததால் வெப்பத்தின் பிடியில் இருந்து தமிழக மக்கள் தப்பிக்க முடிந்தது. இதையடுத்து தமிழ்நாட்டில் மீண்டும் ஜூலை முதல் வாரம் வரை வெயில் வாட்டி எடுத்தது.

தற்போது தென்மேற்கு பருவமழை தீவிரமடைய தொடங்கியுள்ளதால், பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் மழை பெய்து வரும் நிலையிலும், சில மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் இருந்து வருகிறது. அதிலும் குறிப்பாக சில மாவட்டங்களில் வெப்பநிலை 100 டிகிரியை கடந்து வாட்டி வதைத்து வருகிறது.
சனிக்கிழமையான இன்று தமிழகத்தில் 7 இடங்களில் வெப்பநிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை கடந்து பதிவாகி உள்ளது. மதுரை நகர்ப்பகுதியில் 103 டிகிரி பாரன்ஹீட் வெயில் அடித்தது. மிக அதிகபட்சமாக மதுரை விமான நிலையம் பகுதியில் 104.36 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகி உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
மதுரையில் இன்று வெயில் வாட்டி எடுத்த நிலையில், வெளியே செல்ல முடியாமல் மக்கள் மிகுந்த அவதிப்பட்டனர். மேலும், திருச்சி, தஞ்சாவூர், பாளையங்கோட்டை, நாகப்பட்டினம், கரூர், பரமத்தி ஆகிய பகுதிகளிலும் வெயில் கொளுத்தியது.

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் வலுவான தரைக்காற்று 30 -40 கி.மீ வேகத்தில் வீசக்கூடும். நீலகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
நாளை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் வலுவான தரைக்காற்று 30 40 கி.மீ வேகத்தில் வீசக்கூடும். நீலகிரி மாவட்டம், கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் திருவண்ணாமலை, செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை











Click it and Unblock the Notifications