சுற்றி வெள்ள நீர்! கார் மீது ஏறி சம்மணமிட்டு உட்கார்ந்த மன்சூர் அலிகான்! என்னங்க இப்படி பேசுறாரு!
சென்னை: நான் வீட்டை கொஞ்சம் உயரமாக கட்டியதால் தப்பிவிட்டேன். ஆனால் வீட்டுக்குள் மீன் வந்துவிட்டது என நடிகர் மன்சூர் அலிகான் மழை பாதிப்பு குறித்து கூறியிருந்தார்.
மிக்ஜாம் புயல் கரையை கடந்தாலும் சென்னையில் வெள்ள நீர் பெரும்பாலான இடங்களில் வடிந்த பாடில்லை. இதனால் மக்கள் உணவு, மின்சாரம் இல்லாமல் அவதிப்படுகிறார்கள்.

செம்பரம்பாக்கம் ஏரி நீரை திறந்துவிட்டதால் பல இடங்களில் தண்ணீர் வந்துவிட்டதாக கூறப்படுகிறது. அது போல் புறநகர் பகுதிகளில் நாராயணபுரம் ஏரி உடைந்துவிட்டதால் ஏராளமான நீர் வெளியேறி பொதுமக்களின் குடியிருப்புகளை சூழ்ந்துக் கொண்டது.
இதுகுறித்து நடிகர் மன்சூர் அலிகான் கூறியிருப்பதாவது: இந்த தெரு அரும்பாக்கம் திருக்குமரபுரம் 3ஆவது தெரு. அங்கே கூவம் நதி நீர் வந்துவிட்டது. அங்கிருந்து என் வீடு 100 மீட்டர் தொலைவில் உள்ளது. எப்போதும் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட்டால் மழை வெள்ளம் வந்துவிடும். எதையும் செய்ய முடியாது.
பெரும்பாலும் பட்டா இல்லாத நிலங்கள் என்பதால் வீடுகளை தாழ்வாக கட்டிவிட்டார்கள். நான் கொஞ்சம் உயரமாக கட்டியதால் தப்பிவிட்டேன். செம்பரம்பாக்கம் ஏரி மீன் என் வீட்டை தேடி வந்துவிட்டது. மிகப் பெரிய அதிசயம். என் வீட்டில் வளர்க்கும் வாத்துகள் சாப்பிட்டது போல மிச்சம் மீதியை நாங்கள் பொரித்து சாப்பிட வேண்டும்.
செம்பரம்பாக்கம் ஏரியை திறந்துவிடாவிட்டால் ஏரி உடைந்துவிடும். ஏரியை ஒட்டிய பகுதிகளில் வெள்ளம் வந்துவிட்டது. இவ்வளவு ஏன் ஏர்போர்ட்டிலும் தண்ணீர் வந்துவிட்டது. மழை அதிகமாக வந்துவிட்டதால் ஒருத்தரை ஒருத்தர் குறை சொல்லிக் கொண்டிருக்க முடியாது. நியாயத்தை பேசுகிறேன்.
கூவத்தின் ஓரம் உள்ள மக்கள் எல்லாம் பாதிக்கப்பட்டுள்ளார்கள். பல இடங்களில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதால் இந்த வேதனைகளை தாங்க வேண்டியிருக்கிறது. செம்பரம்பாக்கம் ஏரி உடைந்துவிட்டால் சென்னையே மூழ்கிவிடும். 1980 களில் குஜராத்தில் ஒரு பெரிய நகரம் மோர்பி. இங்கு கடிகாரங்கள் செய்கிறார்கள்.
மிகப் பெரிய அணை உடைந்துவிட்டதால் அந்த நகரமே மூழ்கிவிட்டது. பெரும்பாலான மக்கள் இறந்துவிட்டார்கள். அரும்பாக்கத்தில் உள்ள தண்ணீரை எடுத்துவிடுங்கள். இந்த நீர் கூவம் ஆற்றின் வழியாக சென்று கடலில் கலக்க வேண்டும். இங்குள்ள மக்களுக்கு சாப்பாடில்லை. விறகு இருந்தால் கொடுங்கள். நான் என் வீட்டில் சமைத்து கொடுக்கிறேன்.
அரும்பாக்கம் மெட்ரோ அருகே பெரியார் பாதை வழியாக உள்ளே வர வேண்டும். பெரிய வண்டிகள் மட்டுமே உள்ளே வரும், சிறிய வண்டிகள் உள்ளே வராது. இவ்வாறு மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications