அலறிய ஆலந்தூர்.. இதைவிட உக்கிரமான மழையை பார்க்க முடியாது.. வெதர்மேனும் சொல்லுறாரே.. இதை பாருங்க
சென்னை: வடகிழக்கு பருவமழை தமிழ்நாட்டில் சூடு பிடித்துள்ளது. இன்று காலையில் இருந்து தமிழ்நாட்டில் ஆங்காங்கே கனமழை பெய்து வருகிறது. வடகிழக்கு பருவமழை தமிழ்நாட்டில் தீவிரம் அடைந்துள்ளது. முக்கியமாக சென்னையின் பல்வேறு பகுதிகளில் அதிகாலையில் இருந்து மழை பிச்சு எடுத்துக்கொண்டு இருக்கிறது. இந்த நிலையில் ஆலந்தூரில் அதிக அளவு மழை பெய்துள்ளது என்று தமிழ்நாடு வேதாரமென் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
நேற்று இரவு மழை பெய்த மழை காரணமாக சென்னையில் தேங்கிய தண்ணீர் உடனே வடிந்து உள்ளது. சென்னையில், அரும்பாக்கம், கோயம்பேடு, காசிமேடு , ராயப்பேட்டை, கிண்டி, வடபழனி ,திருவொற்றியூர் , எண்ணூர், தேனாம்பேட்டை, அண்ணா சாலை, மெரினா கடற்கரை, சைதாப்பேட்டை, நுங்கம்பாக்கம், ஆகிய பகுதிகளில் இரவு முழுக்க மழை பெய்தது. அதிகாலை 2- 3 மணி நேரம் இங்கு விடாமல் மழை பெய்தது. ஆனாலும் அங்கு தண்ணீர் வேகமாக வடிந்துள்ளது.
பிரதான சாலைகள் எதிலும் சென்னையில் தற்போது வெள்ளம் இல்லை. பொதுவாக சென்னையில் மழை பெய்தால் சப் வேக்களில் தண்ணீர் தேங்கும். ஆனால் சென்னையில் முக்கியமான 15 சப் வேக்களில் தண்ணீர் தேங்கவில்லை. உடனே இங்கிருந்து தண்ணீர் வெளியேறி உள்ளது. அதிகபட்சம் 15 நிமிடத்தில் தேங்கிய தண்ணீர் எல்லாம் வடிந்துவிட்டது. இரவு முழுக்க மழை பெய்தும் கூட அதிக அளவு தண்ணீர் தேங்கவில்லை. மழை நீர் வடிகால் வசதி காரணமாக இப்படி தண்ணீர் வேகமாக வடிகிறது.

ஆனால் ஆலந்தூரில் தண்ணீர்: கடந்த முறை மழை பெய்த போது ஆலந்தூர், கத்திப்பாராவில் வெள்ளம் தேங்கியது. கிட்டத்தட்ட 1 மணி நேரம் தண்ணீர் தேங்கி நின்றது. அதேபோல் இன்றும் கூட ஆலந்தூரிலும், கத்திபாராவிலும் தண்ணீர் தேங்கி உள்ளது.
( இன்று பிற்பகல் நடக்கும் முக்கிய நிகழ்வு.. தமிழ்நாடு வெதர்மேன் வெளியிட்ட செம வார்னிங்.. நோட் பண்ணுங்க)
இந்த நிலையில் ஆலந்தூரில் அதிக அளவு மழை பெய்துள்ளது என்று தமிழ்நாடு வேதாரமென் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். ஆலந்தூரில் ஒரு மணி நேரத்திற்குள் 85 மிமீ மழை பெய்துள்ளது. ஆலந்தூரில் உக்கிரமான மழை பெய்து இருக்கிறது என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.. இங்கே தண்ணீர் தேங்கிய பகுதிகளின் வீடியோ ஒன்றையும் அவர் ஷேர் செய்துள்ளார்.
வெள்ள நீர் தடுப்பு: வெள்ளம் ஏற்படுவதை தவிர்க்க சென்னையில் வெள்ள நீர் வெளியேற்ற குழாய்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. முதல் கட்ட பணிகள் கடந்த வருடம் முடிந்த நிலையில் இரண்டாம் கட்ட பணிகள் இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளன. கிட்டத்தட்ட இதற்காக சென்னையில் எல்லா சாலைகளிலும் குழி தோண்டப்பட்டது. சாலை ஓரங்களில் குழி தோண்டி பணிகளை செய்து வந்தனர். இது மக்களுக்கு கடுமையான இடைஞ்சல்களை ஏற்படுத்தியது. இருந்தாலும் மழை வெள்ளத்தை தடுக்கும் என்பதால் தொடர்ந்து பணிகள் நடந்தன.

பெரிய அளவில் அமைக்கப்பட்டு இருக்கும் இந்த குழிகளில் நீர் வெளியேறுவதற்கான கால்வாய் போன்ற வசதியை ஏற்படுத்தி உள்ளனர். பருவமழை நெருங்கி வருவதால் இந்த பணிகள் வேகமாக செய்யப்பட்டு வந்தன. இந்த நிலையில்தான் மழை காரணமாக சென்னையில் பல சாலைகளில் வெள்ளம் ஏற்படாமல் தண்ணீர் வேகமாக வடிந்துள்ளது. இரண்டு வாரங்களுக்கு முன் சென்னையில் மழை பெய்த போது வெள்ளம் வேகமாக வடிகிறதா என்று சோதனை செய்யப்பட்டது. அதன்படியே வேகமாக வடிந்தது. அப்போது சென்னையில் 90 சதவிகித பணிகள் முடிந்து இருந்தன.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications