வங்கக் கடலில் கருகரு கருப்பாயி.. இன்றைக்கும் தமிழ்நாடே ஊட்டி தான்..! ஆனால் இந்த 8 மாவட்டங்கள் உஷார்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. குறிப்பாக கோவை, நீலகிரி, தேனி, தென்காசி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக கணித்துள்ளது.

தமிழகத்தில் ஆடி மற்றும் ஆவணி மாதங்களில் பலத்த காற்றின் தாக்கம் இருந்தபோதிலும் நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக ஆகஸ்ட் மாத இறுதி பகுதிகளில் பல பகுதிகளில் நல்ல மழை பெய்தது.

weather tamil nadu rain rain

இந்த நிலையில் வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி கரையை கடந்திருக்கும் நிலையில் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது.

தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் புதுச்சேரியிலும் மழை பெய்த நிலையில் கன்னியாகுமரி, கோவை, தென்காசி, திருவள்ளூர், சேலம், காஞ்சிபுரம், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் நல்ல மழை பெய்தது. இந்த நிலையில் இன்றும் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியாகி உள்ள அறிவிப்பில், நேற்று முன் தினம் மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடலில் நிலவிய ஆய்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது நேற்று காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, வடக்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து, விசாகப்பட்டினம் கோபால்பூர் இடையே கலிங்கபட்டினத்திற்கு அருகில் கரையை கடந்தது.

இதன் காரணமாக 2ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிய இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் வடதமிழகத்தில் வலுவான தரைக்காற்று 30 40 மீ வேகத்தில் வீசக்கூடும்.

மேலும் 3ஆம் தேதி முதல் 6ஆம் தேதி வரை தமிழகத்தில் உரிய இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34-35° செல்சியஸை வட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 செல்சியஸை லட்டி சுட்டியும் இருக்கக்கூடும்

இன்றும் நாளையும் மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

மேலும், மத்தியமேற்கு தெற்கு வங்கக்கடல், வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் குறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், மத்திய வங்கக்கடல், வடமேற்கு வங்கக்கடலின் தெற்கு பகுதிகளில் குறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 இலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்

இதேபோல், வடமேற்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 70 முதல் 80 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 90 கிலோ மீட்டர் வேகத்திலும், வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்திலும், மத்தியமேற்கு அரபிக்கடல், தென்மேற்கு அரபிக்கடலின் மேற்கு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், வடக்கு-மத்திய அரபிக்கடல், தெற்கு அரபிக்கடலின் வடக்கு பகுதிகள், கர்நாடகா லட்சதீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு கடலோரப்பகுதிகள் மற்றும் 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்" என எச்சரித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+