பயணிகளே நோட் பண்ணுங்க.. சென்னையில் மெட்ரோ ரயில்கள் இன்று வழக்கம் போல இயங்குமாம்.. வெளியான அறிவிப்பு
சென்னை: மிக்ஜாம் புயலால் சென்னை வெள்ளக்காடாக மாறியுள்ள நிலையில், சென்னையில் மெட்ரோ ரயில்கள் இன்று (5.12.2023) வழக்கம் போல இயங்கும் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
மிக்ஜாம் புயல் வடதமிழக கடலோரம் வழியாக ஆந்திரா நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. தற்போது சென்னையை விட்டு விலகிச் சென்றுவிட்டது. சென்னையிலிருந்து 130 கி.மீ. தூரத்திற்கு அப்பால் உள்ளது. இதனால் இன்று இரவு முதல் மழையானது படிப்படியாக குறையும் என வானிலை மையம் கணித்துள்ளது. முன்னதாக கடந்த 2 தினங்களாக சென்னையில் பெய்த மழையால் சென்னையே வெள்ளக்காடானது.

சென்னையில் முழுவதுமே வெள்ளத்தில் மிதக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். அந்த அளவு மழை பாதிப்பு உள்ளது. சென்னையில் மையப்பகுதிகளில் உள்ள சாலைகளில் கூட வெள்ளம் போல தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. கடந்த 48 மணி நேரமாக பெய்த மழை தற்போது குறைந்துள்ளது. மழை படிப்படியாக குறைந்துள்ளது. பெருமழையால் சென்னையில் இன்று பேருந்து போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
சுரங்கப்பாதைகளிலும் பல முக்கிய சாலைகளிலும் தண்ணீர் ஆறுபோல ஓடியதால் பேருந்துகளை இயக்க முடியாத சூழலும் இருந்தது. புறநகர் ரயில் சேவையும் ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை இயக்கப்பட்ட நிலையில், பிறகு புறநகர் ரயில் சேவையும் நிறுத்தப்பட்டது. சென்னை எழும்பூர், செண்டிரல் ரயில் நிலையங்களில் இருந்து புறப்படும் பல ரயில்களும் ரத்து செய்யப்பட்டன. இதனால் பயணிகளும் கடும் அவதி அடைந்தனர்.
சென்னையில், மெட்ரோ ரயில்கள் இன்று இயக்கப்பட்டன. இதனால் அத்தியாவசிய தேவைகளுக்காக சென்னை நகருக்குள் செல்பவர்கள் மெட்ரோ ரயில்களில் தான் அதிகம் பயணித்ததை காண முடிந்தது. இந்த நிலையில், சென்னை மெட்ரோ ரயில் சேவை இன்று(05.12.2023) வழக்கம் போல காலை 5 மணிக்கு தொடங்கும் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் கூறியுள்ளது.
காலை 5 மணி முதல் பகல் 12 மணி வரை, மற்றும் இரவு 8 மணி முதல் 10 மணி வரை 10 நிமிட இடைவேளையில் ரயில்கள் இயக்கப்படும். பகல் 12 மணி முதல் இரவு 8 மணி வரை 7 நிமிட இடைவேளையில் ரயில்கள் இயக்கப்படும். இரவு 10 மணி முதல் 11 மணி வரை 15 நிமிட இடைவேளையில் ரயில்கள் இயக்கப்படும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவித்துள்ளது.
-
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம்












Click it and Unblock the Notifications