Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மேட்டூர் அணை ஒரு வாரத்தில் 11 அடி உயர்வு.. கை கொடுத்த வருண பகவான்.. ஆர்ப்பரிக்கும் ஒகேனக்கல்

Subscribe to Oneindia Tamil

சேலம்: கர்நாடகா மாநிலம் தண்ணீர் தர மறுத்தாலும் வருண பகவான் கருணையினால் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் மேட்டூர் அணையின் நீர் மட்டம் மளமளவென உயர்ந்து வருகிறது. ஒரு வாரத்தில் 11 அடி உயர்ந்து இன்றைய தினம் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 42.44 அடியாக உயர்ந்துள்ளது.

கர்நாடகா மாநிலத்தின் தலைக்காவிரியில் உற்பத்தியாகி பல நூறு கிலோமீட்டர் பயணம் செய்து பூம்புகாரில் கடலில் கலக்கிறது காவிரி. காவிரி நதிநீரை நம்பி லட்சக்கணக்கான விவசாயிகளும், குடிநீருக்காக லட்சக்கணக்கான மக்களும் உள்ளனர். பருவமழை காலங்களில் பெய்யும் மழைநீரை சேமித்து வைத்து பாசனம் மற்றும் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக 1934ஆம் ஆண்டு காவிரியின் குறுக்கே மேட்டூர் அணை கட்டப்பட்டது. தமிழகத்தில் தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மாவட்டங்களில் உள்ள விளை நிலங்களும், விவசாயிகளும், பொதுமக்களும் காவிரி நதிநீரினால் பயன் பெறுகின்றனர்.

Mettur dam update Today 42.40 Feet: Mettur dam rises 11 feet in one week

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12ஆம் தேதி டெல்டா மாவட்ட பாசனத்திற்காக காவிரி தண்ணீர் மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படுவது வழக்கம். கடந்த ஆண்டு மே மாதமே தண்ணீர் திறக்கப்பட்டது. வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. நடப்பாண்டு ஜூன் மாதத்தில் மேட்டூர் அணை நீர்மட்டம் 100 அடிக்கு மேல் இருந்தது. இதனையடுத்து ஜூன் 12ஆம் தேதியன்று தண்ணீரை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்.

இதேபோன்று சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்டங்களை சேர்ந்த கால்வாய் பாசன விவசாயிகளின் தேவைக்காக ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் 1ஆம் தேதி அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும். தமிழக மற்றும் கர்நாடகம் இடையே காவிரி நீரை பங்கீடு செய்வதில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக உச்சநீதிமன்ற உத்தரவுப்படி ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் முதல் மே மாதம் வரை 177.25 டி.எம்.சி. தண்ணீரை மாதந்தோறும் பிரித்து வழங்க வேண்டும்

அதன் அடிப்படையில் ஜூன் மாதம் முதல் அக்டோபர் 10ஆம் தேதி வரை கர்நாடகம் 28 டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே தமிழகத்துக்கு தந்துள்ளது.
46.9 டி.எம்.சி. தண்ணீரை இன்னும் கர்நாடகத்தில் இருந்து தமிழகத்துக்கு வழங்கப்படவில்லை. கர்நாடகா அணைகளில் தண்ணீர் இருந்த போதிலும் தமிழகத்திற்கு தர வேண்டிய தண்ணீரை தர மறுக்கிறது கர்நாடகா.

தமிழகத்தின் பங்கு தண்ணீரை பெற போராடி வருகிறது தமிழகம். ஆனாலும் தண்ணீரை தராமல் அடம் பிடிக்கிறது கர்நாடகா மாநிலம். காவிரி டெல்டா விவசாயிகள் மீது கர்நாடகா அரசு கருணை காட்டா விட்டாலும் வருண பகவான் கருணையால் காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழையால் கிருஷ்ணராஜசாகர், கபிணி அணைகள் நிரம்பி வருகின்றன.

இதனால் கர்நாடகா அணைகளில் இருந்து கடந்த வாரம் விநாடிக்கு 8000 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் தமிழக எல்லையான பிலிகுண்டுவிற்கு வந்து கொண்டிருப்பதால் ஒகேனக்கல் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. இதனால் படகுப்போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்கு திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது. அணையில் இருந்து குடிநீருக்காக விநாடிக்கு 500 கனஅடி தண்ணீர் மட்டுமே திறக்கப்பட்டு வருகிறது. காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் கடந்த ஒரு வார காலமாகவே ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. இதனையடுத்து மேட்டூர் அணைக்கு விநாடிக்கு 19000 கனஅடி தண்ணீர் கடந்த வாரம் வந்தது. அணையின் நீர்மட்டம் மேலும் உயரத் தொடங்கியது.

தமிழக எல்லையான ஒகேனக்கல் காவிரியில், நீர்வரத்து நேற்று முன்தினம் காலை விநாடிக்கு 14 ஆயிரம் கனஅடியாக இருந்த நிலையில், நேற்று விநாடிக்கு 8,000 கனஅடியாக குறைந்தது. இன்றைய தினம் விநாடிக்கு 6500 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அதே சமயம், மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 18,633 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று மாலை 10,633 கனஅடியாக சரிவடைந்தது. இன்றைய தினம் காலையில் விநாடிக்கு 8900 கனஅடியாக சரிவடைந்தது.

இதனிடையே மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக 500 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர்மட்டம் 42.44 அடியாகவும், நீர் இருப்பு 13.80 டிஎம்சியாகவும் உயர்ந்துள்ளது. கடந்த 7 நாட்களில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 11 அடி உயர்ந்துள்ளது. மேட்டூர் நீர்மட்டம் தொடர்ந்து மளமளவென உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+