Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னை, கோவையில் நோ பவர்கட்.. மழை பாதிப்பு பகுதிகளில் நடவடிக்கை.. செந்தில் பாலாஜி கொடுத்த அப்டேட்

Subscribe to Oneindia Tamil

கோவை: சென்னை மற்றும் கோவையில் மின்சார விநியோகத்தில் எந்த பாதிப்பு இருக்காது என்றும், கோவை மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் துரித கதியில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

வங்கக்கடலில் நிலவும் மேலடுக்கு சுழற்சி, தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாக வாய்ப்பு இருப்பதால் தமிழகத்தில் பல இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. கோவையிலும் பரவலாக மழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

weather coimbatore rains

அந்த வகையில், கோவையில் நேற்று மாலை பலத்த மழை கொட்டித் தீர்த்தது. காலை வேளையில் பெரிதாக மழை இல்லை என்றாலும் மாலையில் வெளுத்து வாங்கியது. மழை காரணமாக பல்வேறு பகுதிகளில் வெள்ளக்காடாக மாறியுள்ளன. சாயிபாபா காலனி, லாலிரோடு, சங்கனூர் சாலை, உக்கடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை நீர் சூழ்ந்து காணப்படுவதால் போக்குவரத்து ஸ்தம்பித்தது.

மழை வெள்ளத்தில் வாகனங்களை இயக்க முடியாமல் பொதுமக்கள் கடும் சிரமத்துக்குள்ளாகினர். குறிப்பாக மேட்டுப்பாளையம் சாலை, சத்தி சாலை, திருச்சி சாலை உள்பட பல்வேறு சாலைகளில் மழைநீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. மழை காரணமாக கோவையில் இன்று அரைநாள் மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

இந்நிலையில், மழை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளான கதிரவன் லே அவுட், சிவானந்த காலனி உள்ளிட்ட பகுதிகளில் மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வு மேற்கொண்டார். கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் பருவ மழை முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

அதைத்தொடர்ந்து, செய்தியாளர்கள் சந்திப்பின்போது அமைச்சர் கூறியதாவது: பருவமழை முன்னெச்சரிக்கை குறித்து முதல்வர், துணை முதல்வர் துறை ரீதியான ஆய்வுக் கூட்டங்களை நடத்தி வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளனர். கோவை மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர், கண்காணிப்பு அதிகாரி உள்ளிட்டோர் இணைந்து பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

கடந்த இரண்டு தினங்களில் பெய்த கடும் மழையிலும் கோவையில் மக்களுக்கு எந்த விதமான பாதிப்பும் இல்லாத வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கோவையில் மழை நீர் முழுவதுமாக அகற்றப்பட்டு பொதுமக்கள் மற்றும் போக்குவரத்து பாதிப்புகள் ஏற்படாத வகையில் சிறப்பான நடவடிக்கைகளை மாவட்ட, மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.

மழையை எதிர்கொள்ளும் வகையில் கடந்த மே மாதம் முதலே மழைநீர் கால்வாய்கள், சாக்கடைகள் தூர்வார்வது உள்ளிட்ட பணிகளை செய்து முடித்திருக்கிறோம். மீதமுள்ள பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கோவையில் மழை பாதிப்புகள் குறித்த செய்திகளை வெளியிடுவதைப்போல துரித நடவடிக்கைகள் குறித்தும் ஊடகங்கள் செய்திகள் வெளியிட வேண்டும்.

ஒரு தரப்பு செய்தியை மட்டும் வெளியிடுவதுபோல தோற்றம் எனக்கு தோன்றுகின்றது. மழை பாதிப்பு குறித்து செய்திகளை கவனத்தில் எடுத்து கொள்கின்றோம். கோவையில் மழை தேங்கும் இடங்கள் என 6 இடங்கள் கண்டறியப்பட்டு இருக்கின்றன. சுரங்கப் பாதைகளில் மழை நீர் பாதிப்பு இருக்கும் இடங்களில் எந்த வாகனம் செல்ல முடியும் என்பதை கலர் மார்க் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஏற்கனவே மின்சார துறை சார்பாக தமிழகம் முழுவதும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. சென்னை, கோவை உட்பட அனைத்து இடங்களிலும் மின்சார விநியோகத்தில் பாதிப்பு இருக்காது. உயிர் இழப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. இதுவரை மின்விநியோகத்தில் பாதிப்பு இல்லை.

சீரான மின்விநியோகம் வழங்கப்பட்டு வருகின்றது. மரக்கிளைகள் அகற்றுவது என 15 லட்சம் பணிகள் நடைபெற்றுள்ளன. உயிர் சேதம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கையாக ஒரு சில இடங்களில் மின்தடை ஏற்படுத்தப்படுகின்றது.

மின்சாரம் தாக்கி உயிரிழப்பு என்பது கடந்த காலங்களை விட தற்போது குறைந்து இருக்கின்றன. வரும் ஆண்டுகளில் இது போன்ற பாதிப்புகள் இருக்காது. தமிழகம் முழுவதும் மின்வாரிய அதிகரிகள் மற்றும் உயர்அதிகாரிகள் கொண்ட வாட்ஸ் அப் குழுக்கள் ஏற்படுத்தபட்டு பாதிப்புகள் குறித்த தகவல்கள் பகிர்ந்து கொள்ளப்பட இருக்கின்றது.

அரசியலுக்காக சில பேர் பழைய வீடியோக்களை பகிர்ந்து வருகின்றனர். தமிழகத்தில் அதிக முறை முதல்வர் சுற்றுபயணம் செய்த மாவட்டம் கோவை. மாவட்ட மக்களுக்கு அளவு கடந்த திட்டங்களை கொடுத்தவர் முதல்வர். சென்னைக்கு இணையாக வேகமாக வளர்ந்து வரும் நகரம் இது.

துணை முதல்வர் , அமைச்சர்கள் ஆய்வு கூட்டங்கள் தொடர்ந்து நடந்து கொண்டு இருக்கின்றது. செய்தி வெளியிட வேண்டும் என்பதற்காக இபிஎஸ் சொல்லி இருக்கின்றார். எந்த மாவட்டத்திலும் தொய்வில்லாமல் பணிகள் சென்றடைய அமைச்சர்கள் பணிபுரிந்து வருகின்றனர் என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+