அவசரம்.. அமித் ஷாவிடம் உதவி கேட்ட ஸ்டாலின்.. கூடுதலாக தேசிய பேரிடர் மீட்பு குழு அனுப்ப வலியுறுத்தல்
சென்னை: மிக்ஜாம் புயல் பாதிப்பு தொடர்பாக கேட்டறிந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் சென்னைக்கு கூடுதல் தேசிய பேரிடர் மீட்புக் குழுவை அனுப்பி வைக்க முதலமைச்சர் முக ஸ்டாலின் கேட்டுக்கொண்டு உள்ளார்.
வங்கக்கடலில் நிலைகொண்டு உள்ள மிக்ஜாம் புயலின் தாக்கம் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் விடிய விடிய கொட்டித்தீர்த்த கனமழை காரணமாக பல இடங்களில் வெள்ளம் சூழந்து மக்கள் கடும் பாதிப்பை சந்தித்து வருகிறார்கள். வீடுகள், கட்டிடங்களுக்குள் வெள்ளம் சூழ்ந்து உள்ளது. போலீசார், மீட்புக் குழுவினர் பொதுமக்களுக்கு தேவையான உதவிகளையும், மீட்புப் பணிகளையும் செய்து வருகிறார்கள்.

இந்த நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்கள் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு 'மிக்ஜாம்' புயல் பாதிப்பு குறித்து கேட்டறிந்தார்.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டு உள்ள வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக உருவாகியுள்ள மிக்ஜாம் புயலினால் தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும், மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்புப் பணிகள் குறித்தும் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்கள் இன்று (4.12.2023), தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு கேட்டறிந்தார்.
அப்போது தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள புயல் பாதிப்புகள் குறித்தும், எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தார். தேசிய பேரிடர் மீட்புக் குழு மற்றும் மாநில பேரிடர் மீட்புக் குழுவினர், அரசு மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன் இணைந்து துரிதமாக மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர் என்றும் கூடுதலாக தேசிய பேரிடர் மீட்புக் குழுவினரை தமிழ்நாட்டிற்கு அனுப்பி வைத்திடுமாறும் கேட்டுக் கொண்டார்.
உடனடி நிவாரணப் பணிகளை மேற்கொண்ட பிறகு பாதிப்புகள் குறித்து உரிய கணக்கெடுப்புகள் நடத்தப்பட்டு தேவைப்படும் உதவிகள் ஒன்றிய அரசிடம் கேட்கப்படும் என்றும் தெரிவித்தார். தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்களின் கோரிக்கையை ஏற்று, ஒன்றிய உள்துறை அமைச்சர் அவர்கள் தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று உறுதி அளித்தார்." என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
-
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில்












Click it and Unblock the Notifications