மீண்டும் ரூம் ஹீட்டருக்கே திரும்பிய ஊட்டி மக்கள்.. ஜில்ஜில் கூல் கூலான உதகை! மழையால் முறிந்த மரம்
ஊட்டி: நீலகிரி மாவட்டம் ஊட்டியில் நேற்று மதியம் 3 மணிக்கு இடி, மின்னலுடன் கூடிய மழை மாலை வரை தொடர்ந்து பெய்தது. இதனால் சிங்காரா பகுதியில் ராட்சத மரம் விழுந்ததில் இரு கார்கள் சேதமாகின.
தமிழகத்தில் கோடை வெயில் தகித்து வருகிறது. நேற்று முதல் அக்னி வெயில் சுட்டெரிக்கத் தொடங்கியது. மலை பிரதேசமான ஊட்டியில் கடந்த சில தினங்களாக மழை சுட்டெரித்தது.

இதனால் அங்குள்ள உள்ளூர் மக்கள் ஏர் கூலரை பயன்படுத்த வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகினர். அதுபோல் தண்ணீரை கொடுக்கும் குந்தாரா அணையிலும் தண்ணீர் குறைந்த வண்ணம் இருந்தது.
அதாவது 30 ஆண்டுகளுக்கு பிறகு அந்த அணையில் இப்படி தண்ணீர் குறைந்து வறண்டு இருந்தது. இந்த நிலையில் கடந்த சில தினங்களாக வெயில் வாட்டி எடுத்த இடங்களுக்கு வருண பகவானின் கருணையால் மழை பெய்தது. வேலூர் , திருப்பத்தூரில் ஆலங்கட்டி மழை பெய்தது.
அது போல் ஏற்காடு, சேலம் பகுதிகளிலும் நல்ல மழை பெய்துள்ளது. அந்த வகையில் நீலகிரி மாவட்டம் ஊட்டியில் நேற்று மதியம் 3 மணிக்கு இடி, மின்னலுடன் தொடங்கிய மழை மாலை வரை தொடர்ந்தது. படகு இல்லம் சாலையில் மழை நீர் தேங்கியதால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டதால் மாற்று வழியில் திருப்பிவிடப்பட்டது.
ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்காவில் மழையையும் பொருட்படுத்தாமல் சுற்றுலா பயணிகள் மலர்களை ரசித்தனர். குன்னூரில் மழை பெய்ததால் சிங்காரா பகுதியில் சாலையில் இருந்த ராட்சத மரம் ஒன்று விழுந்ததில் இரு கார்கள் சேதமடைந்தன. கார் டிரைவர் நந்தகுமாருக்கு லேசான காயம் ஏற்பட்டது.
அங்கு இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. குன்னூர் தீயணைப்பு துறையினர் மரத்தை அகற்றியதும் போக்குவரத்து சீரானது. ஊட்டி, குன்னூர், புறநகர் பகுதிகளில் மழைக்கு பிறகு இதமான சூழல் நிலவியதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். நேற்று மாலை வரை ஊட்டியில் 4 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
தொட்டபட்டாவிலும் நேற்று மழை பெய்தது. அது போல் கோவையிலும் நேற்றைய தினம் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் எப்போதும் இல்லாத அளவுக்கு கோவையில் வெயிலால் பாதிக்கப்பட்ட மக்கள் இந்த மழையால் மகிழ்ச்சி அடைந்தனர்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications