மொந்தா புயல்.. சென்னை மழை குறித்து தமிழ்நாடு வெதர்மேன் வெளியிட்ட இறுதி அறிவிப்பு
சென்னை: மொந்தா புயல் காரணமாக, வட சென்னையில் தொடர்ந்து மழை பெய்யும் என்றும் தென் சென்னையில் தூறல் 2 மணி நேரம் வரை தொடரும் என்றும் பின்னர் மழை குறைந்து மெதுவாக நிற்கும் என்றும் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறியுள்ளார். வட சென்னையில் அதிகபட்சமாக எண்ணூரில் 60-70 மி.மீ. பெய்திருப்பதாகவும் வெதர்மேன் தனது பதிவில் கூறியுள்ளார்.
தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் கடந்த 26-ந்தேதி இரவு 'மொந்தா' புயல் உருவாகியது. இந்த புயல் வட மேற்கு திசை நோக்கி நகர்ந்து கொண்டு வந்தது. குறிப்பாக சென்னைக்கு கிழக்கே 480 கிலோ மீட்டர் தொலைவில் நகர்ந்து கொண்டு நேற்று சென்றது. இன்று தீவிர புயலாக வலுப்பெற்று ஆந்திர மாநிலம் காக்கிநாடா அருகே இன்று இரவு மாலை கரையை கடக்கும். புயல் கரையை கடக்கும்போது, 90 முதல் 110 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது. '

இதன்படியே புயல் காக்கிநாடாவை நோக்கி நகர்ந்து வருகிறது. ஆந்திராவின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. மொந்தா புயல் காரணமாக திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு மாவட்டங்களில் நேற்று காலை முதலே நல்ல மழை பெய்து வந்தது.
குறிப்பாக சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் கனமழை பெய்தது. இந்நிலையில் இன்று காலையும் பரவலாக மழை பெய்தபடியே உள்ளது. மழை குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப்ஜான் வெளியிட்ட அறிவிப்பில், "மொந்தா புயலின் இறுதி மழை அறிவிப்பு: வட சென்னையின் தொடர் மழையும், தென் சென்னையின் தூறலும் இன்னும் 2 மணி நேரம் தொடரும். அதன் பிறகு மழை படிப்படியாகக் குறைந்து நின்றுவிடும்.
பதிவான மழையளவு விவரம்: வட சென்னை: பொதுவாக 60 முதல் 70 மி.மீ வரை மழை பதிவாகியுள்ளது. இதில், கடலுக்கு மிக அருகில் உள்ள எண்ணூர் மற்றும் காசிமேடு (கத்திவாக்கம்) பகுதிகள் மிகக் கனமழையைப் பதிவு செய்துள்ளன. தென் சென்னை: இங்கு 30 முதல் 50 மி.மீ வரை மழை பதிவாகியுள்ளது.
பொதுவாக, "நான் எதிர்பார்த்தது போலவே," "நான் கணித்ததுபோலவே" என்று தன்னைப் புகழ்ந்து பேசுவது எனது வழக்கம் அல்ல. ஆனால், இந்த முறை நான் கொஞ்சம் தன்னைப் பாராட்டிக் கொள்ள விரும்புகிறேன். மழைப்பொழிவின் அளவு மற்றும் அதன் வடிவம் (Rainfall Pattern) ஆகியவற்றுடன் எனது கணிப்பு எவ்வளவு துல்லியமாகப் பொருந்திப் போனது என்று பார்க்கும்போது இது சரியான தருணம். இது ஒரு கடினமான புயலாக இருந்தபோதிலும், இறுதியில் நாங்கள் அதைச் சரியாகக் கையாண்டோம். சென்னைக்கு அடுத்த இரண்டு வாரங்கள் தனிமைப்படுத்தப்பட்ட மழை அல்லது இடைவேளை மழை பெய்யும்." இவ்வாறு கூறியுள்ளார்.
-
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
வேளச்சேரி ஷாக்.. பாட்டியுடன் சென்ற 4 வயது குழந்தை பட்டப்பகலில் காரில் கடத்தல்.. இறுதியில் ட்விஸ்ட்! -
3 லட்சம் சதுரடி! வருது 13 மினி மால்.. சென்னை மெட்ரோ 2ம் கட்ட ஸ்டேஷன்களில் சுவாரசியம்! தரமான பிளானிங் -
நள்ளிரவு ‘பவர் கட்’.. சென்னையில் தொடர் மின்தடைக்கு பின்னணியில் இருக்கும் 3 ‘ஷாக்’ காரணங்கள்! -
1 BHK வீடு கட்டும் செலவில் கட்டிமுடிக்கப்பட்ட எழும்பூர் ரயில் நிலையம்.. இப்போ புத்தம் புதுசா மாறப்போகுது! -
சென்னை மக்களே! ரேஷன் அட்டையில் திருத்தம் செய்யணுமா? செம சான்ஸ்.. இன்னைக்கு மிஸ் பண்ணாதீங்க! -
சென்னை முழுக்க மினி மால்.. அடி தூள்.. இனி வீட்டு பக்கத்திலேயே ஷாப்பிங், தியேட்டர், ஆபீஸ்! -
சென்னையில் சரக்கு ரயில் தடம்புரண்டு விபத்து.. தாம்பரம் அருகே பரபரப்பு -
4 மணி நேர மின்வெட்டு.. சென்னை ஆவடியில் கொந்தளித்த மக்கள்! சாலை மறியலால் போக்குவரத்து பாதிப்பு! -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்!












Click it and Unblock the Notifications