சென்னையில் மழை நீர் தேங்கவில்லையா.. சுற்றுவதை நிறுத்துங்க.. சுமந்த் சி ராமன் ட்வீட்டால் பரபரப்பு
சென்னை: சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் 24 மணி நேரத்தில் 10 செ.மீ.க்கும் குறைவான மழை பெய்துள்ளது என்றும், இது சென்னையை பொறுத்தவரை பெரிய கனமழை இல்லை என்றும், மழை தேங்கவில்லை.. வடிகால் அமைப்புகளில் பெரிய வேலைகள் செய்யப்பட்டுள்ளது போன்று சுற்றுவதை நிறுத்துங்கள் என சுமந்த் சி ராமன் தெரிவித்தார்.
சென்னையில் நேற்று முன்தினம் இரவு தொடங்கி இன்று காலை வரை விட்டு விட்டு கனமழை பெய்துள்ளது. சென்னையின் பெரும்பாலான இடங்களில் மிதமான மழை முதல் பலத்த மழை வரை பெய்த நிலையில், முக்கிய சாலைகள் மற்றும் கடந்த முறை தண்ணீர்தேங்கிய பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கவில்லை.

சென்னை மாநகராட்சி மேயர் பிரியா நேற்று முழுவதுமே பல்வேறு இடங்களுக்கு கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது, மழை நீர் தேங்கும் இடங்களுக்கு சென்று ஆய்வு செய்து, தண்ணீர் உடனுக்குடன் வெளியேற நடவடிக்கை எடுத்தார். இரவு 11 மணிக்கு மேலும் பல்வேறு இடங்களுக்கு சென்று மழை நீர் அகற்றும் பணியினை மேற்கொண்டார்.
இதேபோல் சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணனும் நேற்று காலை தொடங்கிய ஆய்வினை இரவு வரை தொடர்ந்தார். ரெயின் கோர்ட் அணிந்து கொண்டு வட சென்னையின் பல்வேறு பகுதிகள், தென் சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு நேரில் சென்று மழை நீர் தேங்காத வகையில் பணிகளை முடிக்க விரைவுபடுத்தினார்..
சென்னை மாநகராட்சி இன்று காலை வெளியிட்ட அறிவிப்பில், சென்னை மாநகராட்சி பணியாளர்களின் துரித நடவடிக்கை காரணமாக, 22 போக்குவரத்து சுரங்கப்பாதைகளிலும் மழைநீர் தேங்கவில்லை. மழையினால் சரிந்த 12 மரங்களும் அகற்றப்பட்டது. லேசாக மழை நீர் தேங்கிய 41 இடங்களில் 31 இடங்களில் மழைநீர் முழுமையாக வடிந்துவிட்டது என்றார்கள்..
சென்னையில் பல்வேறு இடங்களில் மழை பெய்து தண்ணீர் தேங்காதது குறித்து திமுக ஆதரவாளர்கள் பலர், ஊடங்களில் வந்த வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள்.. இதை பார்த்த அரசியல் விமர்சகர் சுமந்த் சி ராமன், விமர்சித்துள்ளனர்.. அவர் வெளியிட்ட பதிவில், "சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் 24 மணி நேரத்தில் 10 செ.மீ.க்கும் குறைவான மழை பெய்துள்ளது. சென்னையின் நிலையை பொறுத்தவரை இது கனமழை இல்லை. வெள்ளம் இல்லை, வடிகால் அமைப்புகளில் பெரிய வேலைகள் செய்யப்பட்டுள்ளது போன்று சுற்றுவதை நிறுத்துங்கள் என விமர்சித்தார்.
இதற்கு பதிலடி கொடுத்த திமுகவினர், தமிழ்நாட்டிலேயே அதிகபட்சமாக சென்னை மெரினாவில் 19 செமீ மழை பெய்துள்ளது என்றும், அம்பத்தூரில் 9.5 செமீ மழையும், சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 9.4 செமீ மழையும், கோடம்பாக்கத்தில் 8.4 செமீ மழையும், கத்திவாக்கத்தில் 8.4 செமீ மழையும், சோழிங்கநல்லூரில் 8.27 செமீ மழையும் பதிவாகி உள்ளததாக வெதர்மேன் கொடுத்த அப்டேட்டை வெளியிட்டனர். தொடர்ந்து சுமந்த் சி ராமனை விமர்சித்து வருகிறார்கள்.
Most areas of #Chennai received less than 10 cms rain over 24 hours.That is NOT at all heavy rain by Chennai standards. Please stop the spin about no flooding, great work done on drainage systems etc.
— Sumanth Raman (@sumanthraman) November 15, 2023












Click it and Unblock the Notifications