ஷாக்கான வெதர்மேன்! இப்படியொரு மழையை பார்த்ததே இல்லை! தெலுங்கானா மழை! ஜஸ்ட் மிஸ்ஸில் தப்பிய ஐதராபாத்
ஹைதராபாத்: தெலங்கானா மாநிலத்தில் கனமழை கொட்டி தீர்க்கும் நிலையில், அங்கு நிலைமை எந்தளவுக்கு மோசமாக இருக்கிறது என்பதை விளக்கும் படத்தைத் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.
இந்தியாவில் பல்வேறு இடங்களிலும் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இந்தாண்டு கோடைக் காலத்தில் எப்படி வெயிலின் தாக்கம் மிக மோசமாக இருந்ததோ.. அதேபோல மழையும் வெளுத்து வாங்குகிறது.
தமிழ்நாட்டில் பருவமழை அந்தளவுக்குத் தீவிரமடையவில்லை என்ற போதிலும், நாட்டின் பிற பகுதிகளில் வரலாறு காணாத அளவுக்கு மழை உச்சத்தில் இருக்கிறது. இதனால் பாதிப்புகளும் மோசமாகவே இருக்கிறது.

காய்கறி விலையும் கூட பல இடங்களில் உச்சம் தொட்டு இருக்கிறது. தக்காளி விலை பல வாரங்களாக 100ஐ தாண்டி உச்சத்தில் இருக்கிறது. தக்காளி மட்டுமின்றி பீன்ஸ், இஞ்சி என அனைத்து பொருட்களின் விலையும் தொடர்ந்து உயர்ந்தே வருகிறது. நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கொட்டி தீர்க்கும் கனமழையே இதற்குக் காரணம். நமது அண்டை மாநிலமான தெலங்கானாவில் இப்போது இப்படித்தான் அதீத கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.
தெலங்கானா மழை: தெலுங்கானா மாநிலத்தில் வெறும் சில மணி நேரத்தில் தீவிர கனமழை கொட்டியுள்ளது. ஏற்கனவே, அங்கே பல மாவட்டங்களில் மிகக் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் கொடுத்துள்ளது. இந்த கனமழையால் பல பகுதிகளில் வெள்ளம் தேங்கியுள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வழக்கை மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தெலங்கானாவில் பல இடங்களில் 200 மிமீக்கு அதிகமான மழைப் பதிவாகியுள்ளது. குறிப்பாக அங்குள்ள முலுகு மாவட்டத்தில் ஒரே நாளில் 649 மிமீ மழைப் பதிவாகியுள்ளது. மேலும் சித்யாலா மண்டலத்தின் ஜெய்சங்கர் பூபாலப்பள்ளி என்ற பகுதியில் 616 மிமீ மழைப் பதிவாகியுள்ளது. இதேபோல அங்குப் பல இடங்களில் தீவிர கனமழையாக 200 மிமீக்கு மேல் மழைப் பதிவாகியுள்ளது.

தமிழ்நாடு வெதர்மேன்: இதற்கிடையே தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் இது குறித்த தகவல்களைப் பகிர்ந்துள்ளார். தெலுங்கானாவில் மிக மோசமான கனமழை எனக் குறிப்பிட்டுள்ள அவர், ஒரே நாளில் தெலங்கானாவில் எங்கும் 600 மிமீ+ மழை பெய்ததாக தனக்கு நினைவில் இல்லை என்று பதிவிட்டுள்ளார். அவர் பகிர்ந்துள்ள தரவுகளின்படி மொத்தம் 40க்கும் மேற்பட்ட இடங்களில் அதிதீவிர கனமழையாக 200+மிமீ மேலான மழை கொட்டியுள்ளது.
மேலும், அவர் மற்றொரு படத்தையும் பகிர்ந்துள்ளார். அதில் தெலங்கானாவில் எந்தப் பகுதியில் எவ்வளவு மழை பெய்துள்ளது என்பது குறித்த தகவல்கள் உள்ளன. அதன்படி தெலங்கானாவின் வட மாவட்டங்களில் தான் மழை மிக மோசமாக இருந்துள்ளது. அங்குள்ள 8 முதல் 9 மாவட்டங்களில் தீவிர கனமழை கொட்டியுள்ளது. பெரும்பாலான வடமாவட்டங்களில் 64 மிமீ மழைக்கு அதிகமாகவே பெய்துள்ளது.
ஜஸ்ட் மிஸ் ஹைதராபாத்: நல்வாய்ப்பாக தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் இந்தளவுக்கு மோசமாக மழை பெய்யவில்லை. இந்த தீவிர கனமழை என்பது ஹைதராபாத்தில் முன்பு நின்றுவிட்டது. ஹைதராபாத்திலும் பரவலாக மழை பெய்துள்ளது என்றாலும் அங்கு, அங்கே தீவிர மழை இல்லை. அங்குக் கடந்த 24 மணி நேரத்தில் 15 முதல் 64 மிமீ வரையிலான மழை மட்டுமே பெய்துள்ளது.
கட்டிடங்களால் சூழ்ந்து இருக்கும் ஹைதராபாத்தில் இதே அளவுக்கு மழை பெய்திருந்தால் அங்கும் நிச்சயம் பாதிப்பு மிக மோசமாகவே இருக்கும். ஏற்கனவே ஹைதராபாத்தில் இருக்கும் 50% கட்டிடங்கள் வரும் காலத்தில் ஏற்படும் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications