வங்கக்கடலில் புதிய புயல் சின்னம்.. இன்று நடக்கும் முக்கிய மாற்றம்! வானிலை மையம் வார்னிங்
சென்னை: கடந்த மாதம் தமிழ்நாட்டில் மழை இயல்பை விட 36% அதிகமாக பெய்திருந்தது. அக்டோபர் மாதம் பெரும்பாலும் தென்மேற்கு பருவமழைதான் அதிகமாக பெய்தது. இந்நிலையில் வடகிழக்கு பருவமழை தொடங்கியிருக்கும் சூழலில், அதை வலுப்படுத்தும் விதமாக வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
அதன்படி, "அக்.31ம் தேதி மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், கிழக்கு-வடகிழக்கு திசையில் நகர்ந்து, நவ.1ம் தேதியான நேற்று காலை 5.30 மணி அளவில் மத்தியகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய வடகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுகுறைந்து, காலை 8.30 மணி அளவில், அதே பகுதிகளில் நிலவுகிறது.

இது, அடுத்த 24 மணி நேரத்திற்கு, மேலும், கிழக்கு-வடகிழக்கு திசையில், வடகிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் வழியாக, தெற்கு குஜராத் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு மஹாராஷ்ட்ரா கடலோரப்பகுதிகளை நோக்கி நகர்ந்து காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுகுறையக்கூடும்.
வங்கக்கடலை பொறுத்தவரை, தெற்கு மியான்மார் கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும்.
அதேபோல கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்றும் நாளையும் (நவ.2,3 தேதிகளில்) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நவ.4 மற்றும் 5ம் தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நவ.6 மற்றும் 7ம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
இன்று (02-11-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35* செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27* செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
அதேபோல அக்டோபர் மாதத்தில் மட்டும் தமிழகம் 18 செ.மீ அளவுக்கு மழையை பெற்றிருக்கிறது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. அதாவது, வடகிழக்கு பருவமழை அக்.16ம் தேதி தொடங்கியது. இது டிசம்பர் வரை நீடிக்கும். இடைப்பட்ட மூன்று மாதங்களில் மொத்தம் சராசரியாக 44 செ.மீ அளவுக்கு மழை பெய்யும். ஆனால் அக்டோபரில் மட்டும் 18 செ.மீ அளவுக்கு மழை பெய்திருக்கிறது.
சென்னையை பொறுத்தவரை அக்டோபர் மாதத்தின் இயல்பான மழை அளவு 27 செ.மீதான். ஆனால் 35 செ.மீ அளவுக்கு மழை பெய்திருக்கிறது. இது இயல்பான மழையின் அளவை விட 29% அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
-
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்!












Click it and Unblock the Notifications