உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.. நாளை முதல் சம்பவம் உறுதி.. கனமழைக்கு ரெடியா மக்களே!
சென்னை: தமிழ்நாட்டில் இந்தாண்டு கோடைக் காலத்திலும் கூட பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் மாநிலத்தில் பெரும்பாலான இடங்களில் வெப்பம் குறைந்து குளிர்ச்சியான வானிலை நிலவுகிறது. இதற்கிடையே நாளைய தினம் புதிதாகக் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது மழையைத் தரும் என்பது ஓரிரு நாட்களில் தெளிவாகத் தெரிந்துவிடும்.
பொதுவாகத் தமிழ்நாட்டில் மே மாதம் வெப்பம் தான் அதிகமாக இருக்கும். ஆனால், இந்தாண்டு அதற்கு நேர்மாறாக மே மாதம் மழையே அதிகமாக இருந்து வருகிறது. இந்த திடீர் மழையால் மாநிலத்தில் பெரும்பாலான இடங்களில் எதிர்பார்த்த அளவுக்கு வெப்பம் அதிகரிக்கவே இல்லை. இதனால் மக்கள் உற்சாகத்தில் இருக்கிறார்கள்.

கீழடுக்கு சுழற்சி
இதற்கிடையே மற்றொரு சூப்பர் செய்தியாக அரபிக்கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாக வாய்ப்பிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இது தொடர்பாகச் சென்னை வானிலை மையம் வெளியிட்டிருந்த செய்திக்குறிப்பில், "தென்மேற்கு பருவமழை, கேரளாவில் அடுத்த 4-5 தினங்களில் துவங்குவதற்கான வாய்ப்புள்ளது. அதே சமயத்தில் தமிழகத்தில் சில பகுதிகளிலும் பரவுவதற்கான வாய்ப்புள்ளது. மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திரா - வடதமிழக பகுதிகளின் மேல் ஒருவளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
காற்றழுத்த தாழ்வு
தெற்கு கர்நாடக உட்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. கர்நாடக கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்திய கிழக்கு அரபிக்கடலில் வருகின்ற மே 21-ஆம் தேதி வாக்கில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகக்கூடும். இதன் காரணமாக, மே 22-ஆம் தேதி (நாளை) வாக்கில், அதே பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகக்கூடும். பிறகு இது வடக்கு திசையில் நகர்ந்து மேலும் வலுவடையக் கூடும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது இன்றைய தினம் அரபிக்கடலில் உருவாகும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நாளைய தினம் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக உருவாகிறது. அது மேலும் கூட வலுவடைய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. அந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்திற்கு மழை கிடைக்குமா இல்லையா என்பது இன்னும் ஓரிரு நாட்களில் நமக்குத் தெளிவாகத் தெரிந்துவிடும்.
மழை எப்படி
வானிலை மையம் மேலும் கூறுகையில், "இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.நாளை மற்றும் நாளை மறுநாள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
வரும் மே 24ம் தேதி தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மே 25, 26 தேதிகளில் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை கிளைமேட்
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்றைய தினம் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29* செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்" என்று வானிலை மையம் தெரிவித்திருந்து.
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்!












Click it and Unblock the Notifications