இப்போதே தொடங்கிய மழை.. அடுத்த 2 மணி நேரம் உஷாரா இருங்க.. 30 மாவட்டங்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை
சென்ன்னை: தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 30 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதில் சென்னை, அரியலூர், செங்கல்பட்டு, கடலூர், காஞ்சிபுரம், தஞ்சாவூர், திருவள்ளூர், திருவாரூர், தூத்துக்குடி, நெல்லை, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. குமரி, மதுரை, பெரம்பலூர், சிவகங்கை, தென்காசி, தேனி, திண்டுக்கல்லில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது என கூறப்பட்டுள்ளது.
வங்க கடலில் உருவாகியுள்ள டிட்வா புயல் வேகமெடுத்துள்ளது. தற்போது 10 கிமீ வேகத்தில் வடக்கு - வட மேற்கு திசையில் நகர்ந்து வருகிறது. வேதாரண்யத்தில் இருந்து 90 கிமீ தொலைவில் மையம் கொண்டுள்ள இந்த புயல் நாளை கரையை கடக்காமல் கடலிலேயே வலுவிழக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

இப்போதே பெய்யத் தொடங்கிய மழை
சென்னையை நெருங்க நெருங்க மழை அதிகரிக்கும் என்றும், சென்னைக்கு 25 கிமீ தொலைவு வரை இந்த புயல் வரும் எனவும் கணித்துள்ளது வானிலை மையம். இதனால் இன்றும் நாளையும் சென்னைக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. திருவள்ளூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இதற்கிடையே இப்போதே கடலூர், சென்னையில் மழை பெய்ய ஆரம்பித்துவிட்டது. சென்னை, கடலூர், நாகை, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழையே பெய்ய தொடங்கிவிட்டது. இந்த நிலையில் தான் அடுத்த 3 மணி நேரத்திற்கு தமிழகத்தில் 30 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. வானிலை அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
அடுத்த 2 மணி நேரம்
தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்தில் அதாவது இரவு 7 மணி வரை அரியலூர், செங்கல்பட்டு, சென்னை, கடலூர், காஞ்சிபுரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, தஞ்சாவூர், திருவள்ளூர், திருவாரூர், தூத்துக்குடி, திருநெல்வேலி, திருவண்ணாமலை, விழுப்புரம், ஆகிய 18 மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இதேபோன்று கோவை, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, மதுரை, பெரம்பலூர், சிவகங்கை, தென்காசி, தேனி, திருச்சிராப்பள்ளி, திருப்பூர், வேலூர், விருதுநகர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என கூறப்பட்டுள்ளது. முன்னதாக வானிலை ஆய்வு மையம் கூறுகையில்,
75 கிமீ வேகத்தில் காற்று வீசும்
* நாளை வட தமிழகத்தில் அநேக இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறியிருந்தது.
* இதேபோன்று தென் தமிழக கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் பலத்த தரைக்காற்று மணிக்கு 55 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 75 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
* ஏனைய வடதமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவையில் பலத்த தரைக்காற்று மணிக்கு 60 முதல் 70 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 80 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
இரு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்
* திருவள்ளூர் மற்றும் இராணிப்பேட்டை ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும். ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்யக்கூடும்.
* திருவண்ணாமலை, வேலூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், சேலம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என்று கூறியிருந்தது.












Click it and Unblock the Notifications