பசங்களா! சென்னை உள்பட 6 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை.. ஸ்கூலுக்கு ரெடியாகுங்க
சென்னை: வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் சென்னையில் இன்று இரண்டாவது நாளாக கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. சென்னை உள்பட சில மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை இல்லை என மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.
தமிழகத்திற்கு மழை பொழிவை கொடுக்கும் வடகிழக்கு பருவமழை தற்போது அக்டோபர் 20 தேதிக்கு மேல் தொடங்கியது. இது தொடங்கியதும் வங்கக் கடலில் உருவான ஒரு காற்றழுத்தம் மிதிலி புயலாக மாறி ஒடிஸா அருகே கரையை கடந்தது.

தற்போது வரை எந்த காற்றழுத்தமும் உருவாகவில்லை. இந்த மாத கடைசியில் ஒரு காற்றழுத்தம் உருவாகக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் சென்னையில் நேற்று பிற்பகல் முதல் விடிய விடிய மழை பெய்து வருகிறது.
இதனால் சென்னையில் குளிர்ச்சியான சூழலே நிலவி வருகிறது. இந்த நிலையில் சென்னையில் நேற்று முன் தினம் மாலை முதல் விடிய விடிய கனமழை பெய்தது. இதைத் தொடர்ந்து நேற்று காலை முதல் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. ஆங்காங்கே சாரல் மழை பெய்தது.
இந்த நிலையில்தான் இன்றும் 2ஆவது நாளாக விடிய விடிய சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை பெய்துள்ளது. சென்னையில் கிண்டி, தி.நகர், வேப்பேரி, கோயம்பேடு, அமைந்தகரை, மயிலாப்பூர், சிந்தாதிரிபேட்டை, சேப்பாக்கம், வில்லிவாக்கம், நுங்கம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
சென்னையில் நேற்று காலை 8.30 மணி முதல் தற்போது வரை 4 செ.மீ. மழை பதிவாகியுள்ளது அதிகபட்சமாக எண்ணூரில் 5 செ.மீ. மழை பெய்துள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் இன்றைய தினம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை இல்லை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
அது போல் திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், நாகை ஆகிய மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை இல்லை என ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.
குமரிக்கடல், தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் அதனையொட்டிய தென் மேற்கு-மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நேற்று முதல் மீண்டும் பருவமழை தீவிரம் அடைந்துள்ளது.
அந்த வகையில் இன்று முதல் நாளை மறுநாள் 24 ஆம் தேதி வரை தமிழகத்தில் அனேக இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இன்று கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் இந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டது.
மிக கனமழை என்பதால் 11 செ.மீ. முதல் 20 செ.மீ. வரை இந்த பகுதிகளில் மழை பெய்யலாம். அதேபோல், தூத்துக்குடி, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.
நாளை (23-11-2023) நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரையில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. தமிழ்நாட்டில் அனேக இடங்களில் இன்று (22-11-2023) மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், நெல்லை உள்பட 3 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான 'ஆரஞ்சு அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications