இன்னைக்கு நைட் மழை விடாது.. சென்னை உள்பட 28 மாவட்டங்களில் வெளுத்து வாங்கும்.. அலர்ட் மக்களே

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் இன்று மதியத்திற்கு பிறகு பரவலாக பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வரும் நிலையில் இரவும் மழை தொடர்ந்து பெய்யும் என வானிலை மையம் கூறியுள்ளது. குறிப்பாக அடுத்த 2 மணி நேரத்தில் சென்னை, திருவள்ளூர், திருச்சி உள்பட தமிழகம் முழுக்க 28 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.

தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாகவே பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்றும் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டியது. இன்றும் மதுரையில் பல இடங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் பல்வேறு சாலைகளில் மழைநீர் குளம்போல் தேங்கியது. நெல்லையில் பெய்த கனமழையால் அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி சேதமடைந்தன.

Rain Chennai

வெளுக்கும் கனமழை

இப்படி மழை தொடர்ந்து கொட்டி வரும் நிலையில் இன்று இரவும் மழை வெளுத்து வாங்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. சென்னை உள்பட தமிழகம் முழுக்க 28 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை வெளுத்து வாங்கும் என்று கூறியுள்ளது. இது தொடர்பாக வானிலை அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

28 மாவட்டங்களில் மழை பெய்யும்

"தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்தில் அதாவது இரவு 10 மணி வரை, நீலகிரி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர், சேலம், திருவள்ளூர், சென்னை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கடலூர், ராமநாதபுரம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், திருச்சிராப்பள்ளி, நாமக்கல், கரூர், புதுக்கோட்டை, திண்டுக்கல், சிவகங்கை ஆகிய 28 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது" என்று கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+