வட சென்னையை குறி வைத்து அடிக்கும் பருவமழை.. இன்று செஞ்சுரி.. தமிழ்நாடு வெதர்மேன் கொடுத்த அப்டேட்!
சென்னை: இந்த பருவமழைக்கு வடசென்னையை ரொம்பவே பிடித்திருக்கிறது, இன்று வடசென்னை பகுதியில் மழை வெளுத்து வாங்கியுள்ளது என அப்டேட் கொடுத்துள்ளார் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான்.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. நேற்று மாலையில் இருந்து சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. சென்னையைப் பொறுத்தவரை இன்று அதிகாலை முதல் மழை பெய்தது. சிறிது நேரம் இடைவெளி விட்ட மழை மீண்டும் பல்வேறு இடங்களில் பெய்தது.

குறிப்பாக வடசென்னை பகுதியில் இன்று அதிக மழை பெய்தது. காலையிலேயே மழை பெய்ததால் அலுவலகம் செல்வோர், பள்ளி , கல்லூரிகளுக்கு செல்வோர் என அனைவரும் பாதிக்கப்பட்டனர். அடுத்த சில நாட்களுக்கும் இந்த மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
தமிழ்நாடு வெதர்மேன் வெளியிட்ட தகவல்: சென்னையில் பெய்து வரும் மழை தொடர்பாக தனியார் வானிலை ஆய்வாளர் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் வெளியிட்டுள்ள பதிவில், "இந்த பருவமழைக்கு மீண்டும் வடசென்னையை ஸ்பெஷலாக பிடித்துள்ளது. இன்று காலை 8.30 மணி முதல் வடக்கு மற்றும் வடமேற்கு சென்னையில் பரவலாக மழை பெய்தது. அதிகளவிலான மேகங்கள் வட சென்னையை நோக்கி நகர்கின்றன. மணலி - மாதவரம் பெல்ட்டில் 100 மி.மீ மழை சாத்தியம். இன்று காலை 8.30 மணிக்குப் பிறகு மத்திய மற்றும் தென் சென்னையில் மழை அதிகம் இல்லை" எனத் தெரிவித்துள்ளார்.
வானிலை மையம் அலர்ட்: சென்னை வானிலை ஆய்வு மையம், தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாகவும் இதன் காரணமாக மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது. இன்று தமிழ்நாட்டின் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும் சென்னை, திருவள்ளூர்,காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளையும் மழை: மேலும் நாளை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, மாவட்டங்களிலும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக












Click it and Unblock the Notifications