வங்க கடலில் புயல் உருவாக வாய்ப்பு.. சென்னை எண்ணூர் துறைமுகத்தில் 1ஆம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
சென்னை: வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானதை தொடர்ந்து சென்னையை அடுத்த எண்ணூரில் 1 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டிற்கு அதிக மழைப்பொழிவை தரும் வடகிழக்கு பருவமழை நேற்று சனிக்கிழமை தொடங்கியதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. அரபிக்கடலில் உருவாகியுள்ள தேஜ் புயல், தென்மேற்கு அரபிக் கடலில் வடமேற்கு திசையில் நகர்ந்த வருகிறது. இந்த புயல் அக்டோபர் 22 (இன்று) மாலைக்குள் அதிதீவிர புயலாக உருமாறும். ஏமன் நாட்டின் சொகோட்ராவில் இருந்து 380 கி.மீ. தொலைவிலும் ஓமனின் சலாலாவின் தெற்கு - தென்கிழக்கில் 730 கி.மீ தொலைவிலும் மையம் கொண்டிருக்கிறது.

இதனால் எந்த பாதிப்பும் ஏற்படாது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனிடையே தென்கிழக்கு வங்க கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தென்மேற்கு- தென்கிழக்கு வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நகர்ந்து மத்திய மேற்கு வங்கக் கடற்பரப்பில் அடுத்த 24 மணிநேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகிறது. இது நாளை அல்லது மறுநாள் புயலாக வலுவடையக் கூடும் என்கிற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
மேற்கு மத்திய வங்க கடலில் ஒடிஷாவின் பாரதீப்புக்கு தெற்கே 610 கி.மீ. தொலைவிலும் மேற்கு வங்கத்தின் டிகாவுக்கு தெற்கே 760 கி.மீ. தொலைவிலும் இந்த காற்றழுத்த தாழ்வு நிலை மையம் கொண்டிருக்கிறது. வங்க கடலில் புதியதாக உருவாகும் புயலுக்கு ஹாமூன் என பெயரிடப்பட இருக்கிறது. இந்த புயலானது அடுத்த 3 நாட்களில் வடமேற்கு திசையில் நகர்ந்து மேற்கு வங்கம்- வங்கதேசம் இடையே கரையைக் கடக்கக் கூடும் எனவும் கணிக்கப்பட்டு வருகிறது.
ஹாமூன் புயலால் சென்னை உள்ளிட்ட வட தமிழகம் கன மழையை எதிர்கொள்ள வாய்ப்புள்ளது. தமிழ்நாட்டில் இன்று முதல் அக்டோபர் 24-ந் தேதி வரை இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் தமிழ்நாட்டின் 9 துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டுகளை ஏற்றவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியது.
அதன்படி, சென்னையை அடுத்த எண்ணூர் துறைமுகத்தில் 1 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. 1ம் எண் எச்சரிக்கை கூண்டு என்பது புயல் உருவாகக் கூடிய வானிலை சூழல் உருவாகியுள்ளது. பலமான காற்று வீசுகிறது. ஆனால் துறைமுகத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை என்பதை குறிக்கும். புயல் உருவாகும் சூழலை குறிக்கும் விதமாக இந்த எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications