வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை... 169 நிவாரண முகாம்கள் தயார் - கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்
சென்னை: வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது என்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். சென்னையில் மட்டும் 15 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருவதாகவும் அமைச்சர் ராமச்சந்திரன் கூறியுள்ளார்.
வடகிழக்கு பருவமழை கடந்த 21ஆம் தேதி தொடங்கியதிலிருந்து, தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரபடுத்தபட்டுள்ளதாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ் ராமச்சந்திரன் கூறினார். செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் 24 மணி நேரமும் செயல்படும் அவசரகால மையங்கள் கூடுதல் அலுவலர்களுடன் இயங்கி வருகிறது. பொதுமக்களுக்கு புயல். வெள்ள அபாயம் குறித்து முன்னேச்சரிக்கை வழங்க ஏற்பாடுகள் தீவிரபடுத்தபட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

தமிழ்நாட்டில், 01.10.2023 முதல் 01.11.2023 வரை 101.8 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இது இயல்பான மழையளவைக் காட்டிலும் 43 சதவிகிதம் குறைவு ஆகும். வடகிழக்கு பருவமழைக் காலத்தில் 01.11.2023 முடிய, 1 மாவட்டத்தில் அதிகமான மழைப்பொழிவும், 32 மாவட்டங்களில் குறைவான மழைப்பொழிவும், 5 மாவட்டங்களில் இயல்பான மழைப்பொழிவும் ஏற்பட்டுள்ளது. இன்று நவம்பர் 2ஆம் தேதி காலை 8.30 மணி முடிய 33 மாவட்டங்களில் 8.74 மி.மீ. மழை பெய்துள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் அதிகபட்சமாக 37.03 மி.மீட்டரும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் குறைந்தபட்சமாக 0.06 மி.மீட்டரும் மழை பதிவாகியுள்ளது.
தமிழக முதலமைச்சர் அவர்கள் கடந்த 19.09.2023 அன்று ஆய்வுக் கூட்டம் நடத்தி வடகிழக்குப் பருவமழைக்கென மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்து துறை அரசு அலுவலர்களுக்கும் அறிவுரை வழங்கினார்கள். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர், பேரிடர் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்கள்.
தலைமைச் செயலாளர் அவர்கள் 14.09.2023 அன்று அனைத்து துறை அலுவலர்கள், முப்படை மற்றும் ஒன்றிய அரசு அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடத்தி வடகிழக்கு பருவமழையினை திறம்பட எதிர்கொள்ள தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள அறிவுரை வழங்கினார்.
வடகிழக்குப் பருவமழை காலத்தில் கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக ஏற்படும் பாதிப்புகளை தவிர்த்திட தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும், பாதிப்பு ஏற்படக்கூடிய இடங்களில் ஜே.சி.பி. இயந்திரங்கள், மரம் அறுப்பான்கள் உள்ளிட்ட உபகரணங்களுடன், பல்துறை மண்டல குழுக்களையும், மீட்புக் குழுக்களையும், நிவாரண முகாம்களையும் தயார் நிலையில் வைத்திடுமாறும் மாவட்ட ஆட்சியர்களுக்கு 25.09.2023 அன்று சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
பேரிடர் காலங்களில் தங்குதடையின்றி எரிபொருள் கிடைக்கவும், தொலைத்தொடர்பு சேவைகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளவும், எண்ணெய் தொலைத்தொடர்பு நிறுவனங்களுடன் கூடுதல் தலைமைச் செயலாளர் வருவாய் நிருவாக ஆணையர் மற்றும் மாநில நிவாரண ஆணையர் அவர்கள் 05.10.2023 அன்று ஆய்வுக் கூட்டம் நடத்தி அறிவுரை வழங்கினார்.
25.10.2023 அன்று பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் அனைத்து மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கூடுதல் தலைமைச் செயலாளர் / வருவாய் நிருவாக ஆணையர் மற்றும் மாநில நிவாரண ஆணையர் அவர்களால் ஆய்வு வழங்கப்பட்டது. அனைத்து மாவட்டங்களுக்கும், பெருநகர சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களுக்கும், கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு அரசு மேற்கொண்ட பல்வேறு வெள்ளத்தணிப்பு பணிகளின் காரணமாக 4399 ஆக இருந்த பாதிப்பிற்குள்ளாகும் பகுதிகள், தற்போது 3770 ஆக குறைந்துள்ளது. வெள்ளத்தணிப்பு பணிகளுக்காக 2022-23 மற்றும் 2023- 24 ஆண்டுகளில் சென்னை மாநகராட்சி, நகராட்சி நிர்வாகம் மற்றும் நீர்வள ஆதாரத் துறை ஆகிய துறைகளுக்கு 819.50 கோடி நிதிஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நாளை உள் மாவட்டங்களிலும், இன்று கடற்கரை மாவட்டங்களிலும் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
பேரிடர் பணிக்காக 400 பேர் தயார் நிலையில் இருக்கிறார்கள். எங்கே தேவை இருக்கிறதோ அங்கே உடனடியாக வீரர்கள் அனுப்பிவைக்கப்படுவர். இந்த மழையை எதிர்பார்த்து அரசு தயார் நிலையில் இருக்கிறது. மழைநீர் தேங்குவதை தடுக்க இரவு பகல் பாராமல் மாநகராட்சி ஊழியர்கள் வேலை செய்து வருகிறார்கள்.
உள்ளாட்சி துறை அமைச்சர் கே.என்.நேரு அவர்களும் மழைநீர் வடிகால் பணிகளை கண்காணித்து வருகிறார்கள். எதிர்பார்த்த அளவை விட மழையின் அளவு குறைவாக பெய்து வருகிறது. சென்னையில் மட்டும் 15 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறோம். 22 சுரங்க பாதையை கண்காணித்து வருகிறோம்.
169 நிவாரண முகாம்கள் தயார் நிலையில் உள்ளது. 260 ராட்சச பம்புகள் தயார் நிலையில் உள்ளது. கடலோர மாவட்டங்களில் மீனவர்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி தகவல் கூறியுள்ளோம் என பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தகவல் கூறியுள்ளார்.
-
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்! -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்!












Click it and Unblock the Notifications