கணிப்பெல்லாம் பொய்யா கோபால்.. வருத்தப்பட வைத்த வடகிழக்குப் பருவமழை! 6 வருஷத்தில் இல்லாத மாற்றம்!
சென்னை: தமிழகத்தில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை எதிர்பார்த்த அளவுக்கு பெய்யவில்லை. மழை தொடங்குவதற்கு முன்பு, "இயல்பை விட அதிகமாக மழை பெய்யும்" என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. ஆனால் அந்த கணிப்பு இந்தாண்டு தவறாகி, மழை குறைவாகவே பதிவானது. அதாவது கடந்த 2024 ஆம் ஆண்டு 33 சதவீதம் அதிக மழைப்பொழிவு இருந்த நிலையில், இந்த ஆண்டு இயல்பை விட 3 சதவீதம் குறைந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
வடகிழக்கு பருவமழை பொதுவாக அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரை பெய்யும். இந்த மூன்று மாதங்களில் சேர்த்து 44.2 செ.மீ. மழை தான் இயல்பான அளவாக கருதப்படுகிறது. அதில் அக்டோபரில் 18 செ.மீ., நவம்பரில் 17 செ.மீ., டிசம்பரில் 9 செ.மீ. பெய்ய வேண்டும்.
இந்தாண்டு அக்டோபர் மாதத்தில் மட்டும் நன்றாகவே மழை பெய்தது. சுமார் 23 செ.மீ. மழை பதிவான நிலையில், அது இயல்பை விட 36 சதவீதம் அதிகம். ஆனால் அதன்பிறகு நிலை மாறிவிட்டது. நவம்பர் மாதத்தில் வெறும் 15 செ.மீ. மட்டுமே மழை பெய்தது.

வடகிழக்கு பருவமழை
டிசம்பர் மாதத்தில் அதைவிட குறைந்து 4.5 செ.மீ. தான் பெய்துள்ளது. மூன்று மாதங்களையும் சேர்த்து பார்த்தால், தமிழகமும் புதுச்சேரியும் இந்தாண்டு 42.8 செ.மீ. மழை தான் பெற்றுள்ளன. இது இயல்பை விட சுமார் 3 சதவீதம் குறைவு. சென்னை, கோவை, திண்டுக்கல், தேனி, தர்மபுரி, திருப்பூர், காஞ்சிபுரம், சேலம் போன்ற பல மாவட்டங்களில் மழை குறைவாகவே பதிவாகியுள்ளது. புதுச்சேரியிலும் நிலை அதேபோல தான். ஆனால் விருதுநகர், ராமநாதபுரம், வேலூர், தூத்துக்குடி, திருவாரூர், திருநெல்வேலி போன்ற சில மாவட்டங்களில் மட்டும் இயல்பை விட சற்றே அதிகமாக மழை பெய்தது.
மழை குறைவு
கடந்த 5 ஆண்டுகளாக வடகிழக்கு பருவமழை நல்ல அளவில் பெய்து வந்தது. ஆனால் இந்தாண்டு அந்த நிலை மாறி மீண்டும் குறைவான மழை தான் பதிவாகியுள்ளது. இதற்கு கடலில் சாதகமான நிலைமை இல்லாதது, வானிலை சூழல் மாறியது போன்றவை காரணமாக கூறப்படுகின்றன. இன்னும் சில நாட்களுக்கு மழை பெய்யலாம் என்றாலும், டிசம்பர் மாதம் முடிந்துவிட்டதால் அது வடகிழக்கு பருவமழை கணக்கில் சேராது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனினும் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை என்று அதிகாரிகள் கூறுகிறார்கள்.
வானிலை ஆய்வு மையம்
ஏற்கனவே தென்மேற்கு பருவமழை மற்றும் இந்த வடகிழக்கு பருவமழையின் முதல் பாதியில் நல்ல அளவு மழை பெய்ததால், மாநிலத்தின் பெரும்பாலான நீர்த்தேக்கங்களில் போதுமான அளவு நீர் இருப்பு உள்ளது. அதனால் குடிநீர் மற்றும் பாசன தேவைகளை ஓரளவு சமாளிக்க முடியும் என்ற நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில் பார்த்தால், இந்தாண்டு வடகிழக்கு பருவமழை முன்கூட்டிய கணிப்பை போல இல்லை. மழை அளவு இயல்பைவிட சற்று குறைந்துள்ளது. ஆனாலும் நீர்த்தேக்க நிலைமை காரணமாக உடனடியாக பெரிய பாதிப்பு ஏற்படும் சூழல் இல்லை என கூறப்படுகிறது.
சராசரிக்கு குறைவான மழை
ஆனால் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு சராசரியை விட மூன்று சதவீதம் மழை பொழிவு குறைவாக இருப்பது குறிப்பிடத்தக்கது. 2015 ஆம் ஆண்டு 52%, 2014ஆம் ஆண்டு 62%, 2021ஆம் ஆண்டு 59 %, 2024ஆம் ஆண்டில் 33 சதவீதமும் இயல்பை விட அதிக வடகிழக்கு பருவமழை பெய்திருந்தது. 2018ஆம் ஆண்டு தான் கடைசியாக இயல்பை விட 24 சதவீதம் மழை குறைவாக செய்திருந்தது. அதற்குப் பிறகு ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது இயல்பு மழை அளவான 44.2 செ.மீ.ஐ விட 3 சதவீதம் குறைவாக மழை பெய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
-
Low Pressure: காற்றழுத்த தாழ்வு பாதையால் நடக்கும் மேஜிக்! தென் கடலோர மாவட்டங்களில் பிச்சு உதறப் போகுது மழை! -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம்












Click it and Unblock the Notifications