North East Monsoon: வடகிழக்கு பருவமழை எப்போது? இந்திய வானிலை மையம் தகவல்
சென்னை: தமிழகம், தெற்கு ஆந்திரம் ஆகிய பகுதிகளுக்கு பலனைக் கொடுக்கக் கூடிய வடகிழக்கு பருவமழை அக்டோபர் 16- 18 ஆகிய தேதிகளில் தொடங்க சாத்தியம் இருப்பதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தென்மேற்கு பருவமழை வரும் 16- 18 தேதிகளில் இந்திய பகுதிகளில் இருந்து விலகுகிறது. அதே நேரம் வளிமண்டல கீழடுக்குகளில் கிழக்கு அல்லது வடகிழக்கு திசை காற்று வீசக் கூடிய நிலையில் தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் வடகிழக்கு பருவமழை வரும் 16- 18 தேதிகளில் தொடங்குவதற்கான சாத்தியம் உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழை காலம் அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய பகுதிகள் ஆகும். ஆனால் சில நேரங்களில் மழையானது பிப்ரவரி மாதம் வரை கூட கடுங்குளிருடன் பெய்கிறது. இந்திய வானிலை மையம் சொன்னது போல் வரும் 16- 18 ஆகிய தேதிகளில் வடகிழக்கு பருவமழை தொடங்குகிறது என்றால் 20, 21 ஆகிய தேதிகளில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது.
இந்த நேரத்தில் வடகிழக்கு பருவமழை பெய்தால் பட்டாசு வியாபாரம் பாதிக்கும் நிலையும், பட்டாசு வெடிக்க முடியாத சூழலும் இருப்பதாக மக்கள் கவலை கொள்கிறார்கள். 2011 ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகையின் போது சென்னையில் கனமழை கொட்டி தீர்த்தது. அதன் பிறகு மழை இல்லாத நிலையே இருந்தது.
இந்த நிலையில் இந்த ஆண்டு மழை பெய்யும் என சொல்லப்படுகிறது. எனவே இந்த தீபாவளியை மழையுடன் கொண்டாட வேண்டிய சூழல் நிலவுகிறது.
நீலகிரி மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நேற்று காலை முதல் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் காலநிலையில் மாற்றம் ஏற்பட்டு வெயிலின் தாக்கம் குறைந்து அவ்வப்போது சாரல் மழை பெய்து வந்தது. குறிப்பாக, நேற்று முன்தினம் இரவு மாவட்டத்தில் கீழ் கோத்தகிரி பகுதியில் அதிகபட்சமாக 13 செ.மீ மழைப்பொழிவு பதிவாகியுள்ளது. தொடர்ந்து நேற்று காலை முதலே கோத்தகிரி அதன் சுற்று வட்டார பகுதிகளான அரவேனு, கட்டபெட்டு, கைக்காட்டி, கீழ் கோத்தகிரி அதன் சுற்று வட்டார பகுதிகளில் சுமார் மூன்று மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்தது.
இதனால் நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கடுங்குளிர் நிலவி வருகிறது. இது தோட்ட தொழிலாளர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
4 நாளைக்கு மழை தான்.. இன்னைக்கும் 14 மாவட்டங்களில் மழை பிச்சுக்கப் போகுது! ஐஎம்டி கொடுத்த அப்டேட்! -
கத்திரி வெயில் முடிஞ்சுபோச்சு.. சென்னை உட்பட 5 மாவட்டங்களில் இன்று காலையிலேயே மழைக்கு வாய்ப்பு! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி?












Click it and Unblock the Notifications