பழைய குற்றாலத்தில் வெள்ளம்! காப்பாற்ற துடித்த பெண்! புயல் வேகத்தில் ஓடிய போலீஸ்! வெளியான புதிய வீடியோ
சென்னை: பழைய குற்றாலத்தில் கடந்த 17 ஆம் தேதி திடீர் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்ட நிலையில் வீடியோ எடுத்த தந்தையிடம் டாடி காப்பாற்றுங்க என இளம் பெண் கதறியதும் போலீஸ்காரர் புயல் வேகத்தில் ஓடுவதுமாக புதிய வீடியோ வெளியாகியுள்ளது.
கடந்த வாரம் பழைய குற்றால அருவியில் சுற்றுலா பயணிகள் குளித்துக் கொண்டிருந்த நிலையில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அங்கிருந்த பயணிகள் அலறி அடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். அப்போது ஒருவர் வீடியோ எடுத்துக் கொண்டிருந்தார்.

உடனே ஒரு பெண் பதறியபடியே, டாடி வீடியோ எடுக்காதீங்க, காப்பாற்றுங்க என்றார். தனது தந்தை காப்பாற்ற செல்ல தாமதித்த நிலையில் அந்த பெண்ணோ காப்பாற்ற முன்னோக்கி சென்றார். அப்போது அவர் " நீ போய் என்னம்மா செய்ய போகிறாய்" என கேட்டார், இந்த சூழலில் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஒரு போலீஸ்காரர் புயல் வேகத்தில் ஓடி சென்றார். கடந்த 17ஆம் தேதி பழைய குற்றாலத்தில் என்ன நடந்தது என்பது குறித்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
கோடை விடுமுறை என்பதால் ஆங்காங்கே பரவலாக மழை பெய்து வருவதால் குற்றால அருவிகளில் தண்ணீர் விழுவதால் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்திருந்தது. கடந்த 20ஆம் தேதி வரை தென்காசி, தேனி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இதனால் புதிய குற்றாலத்தில் குளிப்பதற்கு கடந்த 17ஆம் தேதி தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து சுற்றுலா பயணிகள் அங்கிருந்து 5 கி.மீ. தூரம் பயணம் செய்து பழைய குற்றால அருவிகளுக்கு மக்கள் வந்தனர். அங்கு ஆர்ப்பரிக்கும் நீரில் குளித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. இதனால் தண்ணீர் பெருக்கெடுத்து படிக்கட்டுகளைத்தாண்டி ஓடி வந்தது. தண்ணீர் அதிகரித்ததும் அங்கிருந்தோர் அலறி அடித்துக் கொண்டு ஓடி வந்தனர். இதில் தண்ணீர் விழுந்த ஃபோர்ஸில் அங்கு குளித்துக் கொண்டிருந்த நெல்லையை சேர்ந்த 16 வயது சிறுவன் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார்.
இதையடுத்து அந்த சிறுவனை தேடும் பணிகளை தீயணைப்பு துறையினர் மேற்கொண்டனர். சிறிது நேரத்தில் நீரின் வரத்து குறைந்ததை அடுத்து அரை கி.மீ. தூரத்தில் சிறுவனின் சடலம் மீட்கப்பட்டது. இந்த நிலையில் சிறுவன் நீரில் அடித்துச் செல்லப்படும் வீடியோ வெளியாகியுள்ளது. அதில் சிறுவன் வெள்ளத்தில் படுத்தபடியே மிதந்து வந்தார்.
ஆனால் தண்ணீரின் வரத்து அதிகபடியாக இருந்ததால் அவரை காப்பாற்ற முடியாமல் போனது. வீடியோவில் அந்த சிறுவன் உருண்டு பிரண்டபடி வருவதை பார்க்கும் போது மனம் பதைபதைத்தது. பழைய குற்றாலத்தில் இது போன்ற வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் சுற்றுலா பயணிகளே உஷாராகி குளிக்காமல் வந்துவிடுவார்களாம்.
பழைய குற்றாலத்தில் ஒரு பெரிய பள்ளம் இருக்கிறது. இதனால் வெள்ளம் வந்தால் அடிக்கும் ஃபோர்ஸில் நேராக பள்ளத்தில்தான் விழுவார்கள். பழைய குற்றாலத்தில் சிறுவன் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் குற்றாலத்தை வனத்துறை பாதுகாப்பில் எடுத்துக் கொள்ள போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications