தென்னிந்தியாவின் குளிர் மிகுந்த பகுதியாக மாறியது ஊட்டி! 2வது இடத்தில் கொடைக்கானல்!
நீலகிரி: கடந்த சில நாட்களாக மத்திய இந்தியா முழுவதும் வீசி வரும் குளிர் காற்று, தமிழ்நாட்டையும் பதம் பார்த்திருக்கிறது. இந்நிலையில் தென்னிந்தியாவின் குளிர் மிகுந்த பகுதியாக ஊட்டி மாறியிருக்கிறது என்று வெதர்மேன் பிரதீப் ஜான் கூறியுள்ளார்.
இது தொடர்பாக தனது x பக்கத்தில் அவர் பதிவிட்டிருப்பதாவது, "இந்த சீசனின் மிக குறைந்த வெப்பநிலையாக 4.2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையை ஊட்டி பதிவு செய்திருக்கிறது. இது தென்னிந்திய மலைப்பிரதேசங்களில் பதிவான வெப்பநிலையில் மிக குறைந்த வெப்பநிலையாகும்.

ஊட்டிக்கு அடுத்தபடி கொடைக்கானலில் வெப்பநிலை குறைவாக பதிவாகியிருக்கிறது. இங்கு 5.1 டிகிரி செல்சியஸ் வரை குளிர் பதிவாகியிருக்கிறது. மாநில வாரியாக பார்த்தால்..
- தமிழ்நாடு ஊட்டி 4.2
- தமிழ்நாடு கொடைக்கானல் 5.1
- தெலங்கானா ஜின்னேதரி (Ginnedari) 7.3
- கர்நாடகா ஹாசன் 8.1
- ஆந்திரா அரக்கு 8.2
- தமிழ்நாடு குன்னூர் 8.2
- தமிழ்நாடு வால்பாறை 8.5
- ஆந்திரா லம்பசிங்கி 9.8
- தமிழ்நாடு ஏற்காடு 10.0
- கர்நாடகா சிக்மகளூர் 10.1
- கேரளா இடுக்கி 10.9
என வெப்பநிலை பதிவாகியிருக்கிறது. என்று வெதர்மேன் தனது x பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவெனில் முதல் 10 இடங்களில், ஊட்டி, கொடைக்கானல் மட்டுமல்லாது, குன்னூர், வால்பாறை, ஏற்காடு என 5 இடங்கள் குளிர் நிறைந்த இடங்களாக பதிவாகியிருக்கின்றன என்பதுதான்.












Click it and Unblock the Notifications