இரவு முழுக்க மழை விடாது போலயே.. சென்னை உள்பட தமிழகம் முழுக்க 21 மாவட்டங்களுக்கு அலர்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் அடுத்த ஒரு மணி நேரத்தில் சென்னை உள்பட தமிழகம் முழுக்க 21 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை வெளுத்து வாங்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு நிற எச்சரிக்கையை விடுத்துள்ளது. செங்கல்பட்டு, கோவை, கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், மதுரை, தென்காசி என 21 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்றும் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்தது. நெல்லை, தென்காசி, குமரி, சிவகங்கை, கோவை, நீலகிரி, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்தது. விருதுநகர், தென்காசி மாவட்டங்களில் இரவு 8 மணியளவில் கனமழை வெளுத்து வாங்கியது.

orange-alert-for-heavy-rain-issued-in-21-districts-across-tamil-nadu-including-chennai-until-10-pm

இந்த நிலையில் தமிழகத்தில் அடுத்த 1 மணி நேரத்தில் 21 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது. வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

செங்கல்பட்டு, சென்னை, கோவை, கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், மதுரை, பெரம்பலூர், புதுக்கோட்டை, ராணிப்பேட்டை, சேலம், சிவகங்கை, தென்காசி, தஞ்சை, தேனி, நீலகிரி, திருவள்ளூர், திருச்சி, திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம் மற்றும் விருதுநகர் ஆகிய 21 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை வெளுத்து வாங்கும் என ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதனால் சில இடங்களில் தண்ணீர் தேங்க வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+