குமரி உட்பட 15 மாவட்ட மக்களுக்கு வார்னிங்! அடுத்த 2 மணி நேரத்திற்கு ஆரஞ்சு+மஞ்சள் அலர்ட்!
சென்னை: தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை தீவிரம் எடுத்திருக்கிறது. நேற்று பெய்த மழையில் கோவை, திருப்பத்தூர் மற்றும் நாகர்கோவிலில் வெள்ளம் தேங்கியது. இப்படி இருக்கையில் அடுத்த 2 மணி நேரத்தில் கன்னியாகுமரி உட்பட 15 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு மற்றும் மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டிருக்கிறது.
தமிழ்நாட்டிற்கு தென்மேற்கு மற்றும் வடகிழக்கு என இரண்டு பருவமழை பரவலான மழையை கொடுக்கும். அந்த வகையில் கடந்த ஜூலையில் தொடங்கி செப்டம்பர் இறுதி வரை தென்மேற்கு பருவமழை பெய்தது. தென் மற்றும் கொங்கு மாவட்டங்களில் அதிக மழையை கொடுத்த இது, டெல்டா மாவட்டங்களை கண்ணாமூச்சி காட்டி ஏமாற்றிவிட்டது.

ஆனால், அக்.1ம் தேதி தொடங்கிய வடகிழக்கு பருவமழை, மாநிலம் முழுவதும் பாரபட்சமில்லாமல் பெய்து வருகிறது. இன்று காலை வரை மொத்தமாக 200.2 மி.மீ அளவுக்கு பெய்திருக்கிறது. இது இயல்பை விட 54% அதிகமாகும். குறிப்பாக டெல்டா மாவட்டங்களான திருவாரூர், தஞ்சாவூர், நாகை மற்றும் மயிலாடுதுறையில் அதிக அளவு மழை பெய்திருக்கிறது. அதேபோல திருப்பத்தூர், வேலூர் என வட மாவட்டங்களிலும், கன்னியாகுமரி, தென்காசி என தென் மாவட்டங்களிலும் மழை ஒரு காட்டு காட்டியிருக்கிறது.
கனமழை காரணமாக கன்னியாகுமரியில் கோதையாறு, கிளவியாறு, மோதிரமலையாறு, கல்லாறு, குழித்துறை தாமிரவருணி போன்ற ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது. இதனால் பழங்குடியின மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றனர். மறுபுறம் விருதுநகர் மாவட்டம் சதுரகிரி மலையிலும் வெள்ளம் பெருக்கெடுத்திருக்கிறது. இதனால் பக்தர்கள் மலையேற அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது.
இப்படி இருக்கையில், அடுத்த 2 மணி நேரத்திற்கு அதாவது மாலை 4 மணி வரை 15 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு மற்றும் மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டிருக்கிறது. அதாவது கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல் திருப்பூர் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களுக்கு கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்டும், சிவகங்கை, பெரம்பலூர், ஈரோடு, சேலம் மற்றும் திருச்சிக்கு மிதமான மழைக்கான மஞ்சள் அலர்ட்டும் சென்னை வானிலை ஆய்வு மையத்தால் விடுக்கப்பட்டிருக்கிறது.
மஞ்சள், ஆரஞ்சு அலர்ட் விளக்கம்: 64.5 மி.மீ முதல் 115. 5 மி.மீ வரை மழை பெய்யும் என எதிர்பார்க்கப்பட்டால், மஞ்சள் அலர்ட் விடுக்கப்படும். இதுவே, ஒரு நாளில் 115.6 முதல் 204.4 மிமீ வரையிலான மழைப்பொழிவுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்படும்.
ரெட் அலர்ட் விளக்கம்: மக்களின் இயல்பு நிலை பாதிக்கும் வகையில் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இருக்கும் போது ரெட் அலர்ட் விடப்படும். இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டால் போக்குவரத்து, மின்சாரம், இணையம், மற்றும் தொலைத் தொடர்பு துண்டிக்கப்படுவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன என்று அர்த்தம். 24 மணி நேரத்தில் 204.5 மிமீக்கு அதிகமாக மழை பெய்யும் போது ரெட் அலர்ட் விடுக்கப்படுகிறது.
-
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
பொதுமக்களே உஷார்! இன்று 22 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை.. மஞ்சள் அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
வெளுத்து வாங்கப் போகும் கனமழை! இரவோடு இரவாக 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications